azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 23 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 23 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The Avatar (Divine Incarnation) is the Power of the Supreme Soul (Aathmashakti) that has put on the raiment of kriya shakti and yoga shakti (power of action and power of divine communion). Generally, Avatarana (the process of incarnation), is described as a 'coming down' from a higher status to a lower one. But, no! When the baby in the cradle weeps, wails and clamours for help, the mother stoops and takes it up in her arms. Her stoop is not to be described as a 'coming down.' If you earn the necessary credentials, the Incarnation will come and save you. If, on the other hand, you multiply your demerits and descend lower and lower, how can you be saved? Have love and ananda (divine bliss) in your heart. Ananda comes from pure sight, pure hearing, pure speech and pure actions. The day you establish yourselves in this ananda, that day will be My Birthday for you.( Divine Discourse, Nov 23, 1978)
I AM THE PERSON COME TO GIVE, NOT TO RECEIVE. AND, WHAT YOU CAN OFFER ME IS JUST THIS: PURE, UNADULTERATED LOVE. WHEN YOU OFFER ME THAT, I DERIVE BLISS. - BABA
இறைவனின் அவதாரம் என்பது க்ரியா சக்தியையும் யோக சக்தியையும் ஆடையாக தரித்த பரமாத்ம சக்தியாகும். பொதுவாக, அவதரணம் (அவதாரம் எடுப்பது) என்பது, உயர்நிலையிலிருந்து கீழ்நிலைக்கு ‘இறங்கி வருதல்’ என்றே விவரிக்கப்படுகிறது. ஆனால், அது அவ்வாறல்ல! தொட்டிலில் இருக்கும் குழந்தை அழுது, உதவிக்காக வாய்விட்டு அலறும்போது, தாய் குனிந்து அதைத் தன் கைகளில் எடுத்துக்கொள்கிறாள். அவள் குனிந்து எடுத்துக் கொள்வதை, ‘இறங்கி வருதல்’ என்று விவரிக்கக்கூடாது. நீங்கள் தேவையான தகுதிகளைப் பெற்றுவிட்டால், அவதாரம் வந்து உங்களைக் காப்பாற்றும். மாறாக நீங்கள், உங்களுடைய பாவங்களை அதிகரித்துக் கொண்டு, மேன்மேலும் தாழ்ந்து கொண்டே போனால், நீங்கள் எப்படி காப்பாற்றப்படுவீர்கள்? உங்களுடைய இதயத்தில் ப்ரேமை மற்றும் ஆனந்தத்தைக் கொண்டிருங்கள். ஆனந்தம் என்பது தூய்மையான பார்வை, தூய்மையானவற்றைக் கேட்பது, தூய்மையான பேச்சு, தூய்மையான செயல்கள் ஆகியவற்றின் மூலம் வருகிறது. எந்த நாளில் இந்த ஆனந்தத்தில் உங்களை நீங்கள் நிலை கொள்ளச் செய்கிறீர்களோ, அந்த நாள் தான் உங்களுக்கு என்னுடைய பிறந்த நாளாகும். (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1978)
நான் கொடுப்பதற்கு வந்தவனே அன்றி, பெறுவதற்கு வந்தவன் அல்ல. மேலும், நீங்கள் எனக்கு அளிக்க வேண்டியதெல்லாம் பரிசுத்தமான, கலப்படமற்ற ப்ரேமையை மட்டுமே. நீங்கள் அதை அளிக்கும்போது நான் ஆனந்தம் அடைகிறேன். – பாபா