azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Due to defects in the modern education system, love is diminishing in man day by day. Hatred is on the rise. Man is forgetting truth (yatartha), thereby subjecting himself to danger (anartha). He has forgotten humanness (manavatva) by developing animal tendencies (pashutva). True spirituality lies in destroying pashutva and transforming manavatva into Divinity (Daivatva). It is not possible to attain Divinity without getting rid of animality. Today man is behaving like an animal because of his selfish love. Such a person can never enjoy happiness. He will always be immersed in misery. The more you love others, the greater will be the joy you experience! The more you develop hatred, the more miserable your life will be! Understand that God is the embodiment of Love and so also is man. So, you are God! There’s Divinity even in animals. (Divine Discourse, Aug 22, 2000)
WITHOUT THE CONQUEST OF ANIMAL NATURE, ALL FORMS OF EXTERNAL WORSHIP ARE OF NO USE. - BABA
நவீன கல்விமுறையில் உள்ள குறைபாடுகளால், மனிதனுள் ப்ரேமை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. த்வேஷம் அதிகரித்துக் கொண்டே போகிறது. மனிதன் உண்மையை (யதார்த்தம்) மறந்துவிடுவதால், தன்னையே அபாயத்திற்கு (அனர்த்தம்) ஆளாக்கிக் கொள்கிறான். மிருக குணங்களை (பசுத்வம்) வளர்த்துக் கொள்வதன் மூலம், அவன் மனிதத்தன்மையை (மானவத்வம்) மறந்து விட்டான். உண்மையான ஆன்மிகம் என்பது, பசுத்துவத்தை அழித்து, மானவத்துவத்தை, தெய்வீகமாக (தெய்வத்துவம்) நல்மாற்றம் செய்வதில் தான் இருக்கிறது. மிருகத்தன்மையை விட்டொழிக்காமல், தெய்வீகத்தை அடைவது என்பது சாத்தியமல்ல. இன்று மனிதன் தன் சுயநலமான ப்ரேமையின் காரணமாக ஒரு மிருகம் போல நடந்து கொள்கிறான். இப்படிப்பட்ட ஒரு மனிதன் ஒருபோதும் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. அவன் எப்போதும் துயரத்திலேயே ஆழ்ந்திருப்பான். நீங்கள் மற்றவர்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி இருக்கும்! நீங்கள் எவ்வளவு வெறுப்பை வளர்த்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் வாழ்க்கை பரிதாபகரமாக இருக்கும்! இறைவன் ப்ரேமையின் திருவுருவம், மேலும் மனிதனும் அவ்வாறே என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, நீங்கள் இறைவனே! மிருகங்களில் கூட தெய்வீகம் இருக்கிறது. (தெய்வீக அருளுரை, டிசம்பர் 25, 2001)
மிருக இயல்பை வெற்றி கொள்ளாமல் எல்லா வகையான புறவழிபாடுகளும் பயனற்றவையே. - பாபா