azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 18 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 18 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

You are attributing various names and forms to God for your own satisfaction, but God is essentially one. Be He Rama, Krishna, Allah or Jesus, all their teachings are meant for the emancipation of man. No religion preaches violence or to harm anybody. Some evil-minded people are misinterpreting sacred teachings and indulging in wicked deeds. All noble souls have taught sacred things. They said: “Love all”. They did not preach hatred. God never tells anyone to kill others. No one has any right to kill others because the same Atma is present in all. In the name of God, people are committing heinous crimes. It is not good for anybody. There is no God greater than love. Love is God, God is love. Live in love. Destroy wicked qualities. Mean-minded people try to attribute their meanness to God. It’s a sign of ignorance. Don’t pay heed to such people. Have faith in your own Self. Otherwise, you cannot love God.( Divine Discourse, Aug 22, 2000)
SOAK YOUR HEART IN LOVE, SOAK YOUR ACTS IN RIGHTEOUSNESS, SOAK YOUR EMOTIONS IN COMPASSION; THEN YOU ATTAIN GOD SOONEST. - BABA
நீங்கள் உங்கள் திருப்திக்காக இறைவனுக்கு பல்வேறு நாம, ரூபங்களை அளிக்கிறீர்கள், ஆனால் இறைவன் அடிப்படையில் ஒருவனே. அவர் ராமர், கிருஷ்ணர், அல்லா அல்லது இயேசு என யாராக இருந்தாலும், அவர்கள் எல்லோருடைய போதனைகளும் மனிதனின் விடுதலைக்கானவையே. எந்த மதமும் வன்முறையையோ, எவருக்கும் தீங்கிழைப்பதையோ போதிக்கவில்லை. சில தீய மனம் கொண்டவர்கள் புனிதமான போதனைகளை தவறாகப் புரிந்துகொண்டு கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆன்றோர்கள் அனைவரும் புனிதமான விஷயங்களையே போதித்தார்கள். அவர்கள், "எல்லோரையும் நேசியுங்கள்" என்றே கூறினார்கள். அவர்கள் த்வேஷத்தை போதிக்கவில்லை. இறைவன் எவரையும், பிறரைக் கொல்ல வேண்டும் என்று ஒருபோதும் சொல்வதில்லை. எவருக்கும் பிறரைக் கொல்வதற்கான எந்த அதிகாரமும் கிடையாது, ஏனெனில், ஒரே ஆத்மாதான் அனைவருள்ளும் உறைகிறது. இறைவனின் பெயரால், மக்கள் கொடூரமான குற்றங்களைச் செய்கிறார்கள். இது எவருக்கும் நல்லதல்ல. ப்ரேமையை விட உயர்வான இறைவன் இல்லை. ப்ரேமையே இறைவன். இறைவனே ப்ரேமை. ப்ரேமையில் வாழுங்கள். தீய குணங்களை அழித்து விடுங்கள். அற்ப மனம் கொண்டவர்கள், தங்களுடைய அற்பத்தனத்திற்கு இறைவனைக் காரணமாகக் காட்ட முயற்சிக்கின்றனர். இது அறியாமையின் அடையாளம். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு செவி மடுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை கொண்டு இருங்கள். இல்லையென்றால், நீங்கள் இறைவனை நேசிக்க முடியாது. (தெய்வீக அருளுரை, டிசம்பர் 25, 2001)
உங்கள் இதயம் ப்ரேமையிலும், உங்கள் செயல்கள் தர்மத்திலும், உங்கள் உணர்வுகள் கருணையிலும் திளைக்கட்டும்; பின்னர் நீங்கள் வெகு விரைவில் இறைவனை அடைவீர்கள். – பாபா