azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 12 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 12 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The eighth flower to be offered is Truth (Satya). This is very important. The entire world has originated from Truth, is sustained by Truth and ultimately merges into Truth. There is no place without the principle of Truth. Truth is changeless in all three periods of time - past, present and future (Trikala-badhyam Satyam). Everything may disappear, but Truth remains forever. So, Truth is God, live in Truth. God will be pleased only when you worship Him with these eight types of flowers (non-violence, sense-control, compassion, forbearance, peace, penance, meditation and Truth). Priests in temples worship God with various types of flowers. But God doesn’t want these flowers. He says, “O Priest, is this what you learnt all these years? You are worshipping Me with loads of roses and jasmines, which fade away in a short time. These aren’t the flowers that I expect from you. Worship Me with these eight flowers which will never fade.” (Divine Discourse, Aug 22,2000)
GOD EXPECTS YOU TO FILL YOUR HEART WITH LOVE AND LEAD A SACRED LIFE. – BABA
அர்ப்பணிக்க வேண்டிய எட்டாவது மலர் சத்யம் எனும் புஷ்பமாகும். இது மிகவும் முக்கியமானது. உலகனைத்தும் சத்தியத்திலிருந்தே தோன்றி, சத்தியத்தினால் நிலைபெற்று, இறுதியில் சத்தியத்திலேயே இரண்டறக் கலந்து விடுகிறது. சத்திய தத்துவம் இல்லாத இடமே இல்லை. சத்தியம் என்பது முக்காலங்களிலும் - கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலங்களிலும் மாறாத ஒன்றாகும் (த்ரிகால பாத்யம் சத்யம்). அனைத்தும் மறைந்து விடலாம், ஆனால் சத்தியம் என்றும் நிலைத்திருக்கும். எனவே, சத்தியமே இறைவன், சத்தியத்தில் வாழுங்கள். நீங்கள் இறைவனை இந்த எட்டுவிதமான புஷ்பங்களால் வழிபட்டால் மட்டுமே அவன் மகிழ்ச்சி அடைவான் (அஹிம்சை, புலனடக்கம், தயை, சகிப்புத்தன்மை, சாந்தி, தவம், தியானம் மற்றும் சத்தியம்). அர்ச்சகர்கள் ஆலயங்களில் இறைவனை பலவிதமான புஷ்பங்களால் ஆராதிக்கின்றனர். ஆனால் இறைவன் இந்தப் புஷ்பங்களை விரும்புவதில்லை. "ஓ அர்ச்சகரே! இத்தனை வருடங்களாக நீங்கள் கற்றுக்கொண்டது இதுதானா? நீங்கள் குறுகிய காலத்திலேயே வாடிவிடும் ஏராளமான ரோஜா மற்றும் மல்லிகைப்பூக்களால் என்னை ஆராதித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் புஷ்பங்கள் இவையல்ல. என்றுமே வாடாத இந்த எட்டு புஷ்பங்களால் என்னை ஆராதியுங்கள்" என்று இறைவன் கூறுகின்றான். (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட் 22, 2000)
உங்களுடைய இதயத்தை ப்ரேமையால் நிரப்பிக்கொண்டு, புனிதமான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று இறைவன் உங்களிடம் எதிர்பார்க்கின்றான். - பாபா