azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 07 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 07 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! Follow the heart, do not follow the head, lest you should be caught up in the mire of worldly life. Head puts you in many dangers. If you follow the head, you may lose your head itself! Turn your vision inward. Follow the heart, which is the source of all noble qualities like truth, righteousness, peace, love and non-violence. Here we find many bulbs glowing in this hall. How? Current flows through the wire, enters the bulb and gives us light. Likewise, when the current of truth flows through the wire of righteousness and enters the bulb of peace, we get the light of love. A true human being is the perfect combination of these five human values. These are, in fact, the very life-principle of man, without which one is just like a corpse. ( Divine Discourse, Apr 05,2000)
THE FIVE ELEMENTS ARE NATURAL PHENOMENA IN CREATION. SIMILARLY, THE FIVE HUMAN VALUES ARE NATURAL TO HUMAN BEINGS. - BABA
ப்ரேமையின் திருவுருவங்களே! உலக வாழ்க்கை எனும் சேற்றில் நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு இதயத்தைப் பின்பற்றுங்கள், தலையைப் (மனம்) பின்பற்றாதீர்கள். தலை உங்களை பல ஆபத்துக்களுக்கு உள்ளாக்கிவிடுகிறது. தலையை நீங்கள் பின்பற்றினால், உங்கள் தலையையே நீங்கள் இழந்துவிடக்கூடும்! உங்கள் பார்வையை அகத்தை நோக்கித் திருப்புங்கள். சத்தியம், தர்மம், சாந்தி, ப்ரேமை, அஹிம்சை போன்ற அனைத்து சீரிய குணங்களின் மூலாதாரமான இதயத்தைப் பின்பற்றுங்கள். இந்த மண்டபத்தில் பல பல்புகள் ஒளிர்வதை நாம் காண்கிறோம். எப்படி? மின்கம்பிகளின் வழியாக மின்சாரம் பாய்ந்து, பல்புகளில் புகுந்து, நமக்கு வெளிச்சத்தைத் தருகிறது. அதைப் போலவே, சத்தியம் எனும் மின்சாரம், தர்மம் எனும் மின்கம்பிகளின் வழியாகப் பாய்ந்து, சாந்தி எனும் பல்பை அடையும்போது, நாம் ப்ரேமை எனும் ஒளியைப் பெறுகிறோம். ஒரு உண்மையான மனிதன் இந்த ஐந்து மனிதப்பண்புகளின் சரியான கலவையே. உண்மையில், இவையே மனிதனின் ஜீவ தத்துவம் ஆகும்; இவை இன்றி ஒருவர் உயிரற்ற சடலம் போன்றவரே. (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 05, 2000)
பஞ்ச பூதங்கள் படைப்பின் இயற்கையான அம்சங்கள். அதைப் போல, ஐந்து மனிதப்பண்புகளும் மனிதர்களுக்கு இயற்கையானவை. – பாபா