azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 05 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 05 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Many ideas take shape in the human heart; they wander to the very ends of the eight directions. Some of these are mutually supporting; some are mutually destructive. But without leaving them free, they must all be canalized and disciplined to subserve some high purpose. Only then can you be established in peace. You must have the cleverness needed for this canalization. It is not merely cleverness in the use of external things; it lies more in the control and subjugation of the mental faculties; this is essential for the blossoming of the Atma. For understanding the faculties of your own mind, you must move with elders experienced in that line or in the sublimation of the vagaries of the mind. Until you intelligently fix upon a certain direction for all your thoughts and activities, you will only be building shadowy castles in the air and roaming about in them.( Prasanthi Vahini, Ch 22)
WHEN WE SAY 'ONE-POINTEDNESS’ IT MUST MEAN THAT THE MIND SHOULD BE POINTED TOWARDS THE 'ONE' THAT IS DENOTED AS BEING WITHOUT A SECOND, THE 'ONE' WHICH HAS WILLED THAT IT MAY BECOME THE MANY. - BABA
மனித இதயத்தில் பல கருத்துக்கள் உருவாகின்றன; அவை எட்டுத் திசைகளின் எல்லைவரை அலைபாய்கின்றன. இவற்றில் சில ஒன்றுக்கொன்று ஆதரவளிப்பவை; மற்றும் சில ஒன்றை ஒன்று அழிப்பவை. ஆனால் அவற்றை சுதந்திரமாக விட்டுவிடாமல், அவை அனைத்தும் ஏதேனும் ஒரு உயர்ந்த நோக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் நெறிப்படுத்தப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அதன் பிறகே, நீங்கள் சாந்தியில் நிலைகொண்டிருக்க முடியும். இந்த நெறிப்படுத்தலுக்குத் தேவையான புத்திசாலித்தனம் உங்களுக்கு இருக்க வேண்டும். இது வெறும் வெளிப்புற விஷயங்களை பயன்படுத்துவதில் உள்ள புத்திசாலித்தனம் மட்டுமல்ல; அதை விட மனத்திறன்களைக் கட்டுப்படுத்தி அடக்குவதில் தான் இது அதிகம் இருக்கிறது; ஆத்மா மலர்ச்சியடைவதற்கு இது அத்தியாவசியமாகும். உங்கள் மனதின் திறன்களைப் புரிந்துகொள்ள, நீங்கள் அந்த வழியில் இருக்கும் அல்லது மனதின் ஊசலாட்டங்களை அடக்குவதில் அனுபவம் வாய்ந்த பெரியோர்களிடம் பழக வேண்டும். நீங்கள் உங்களுடைய சிந்தனைகள் மற்றும் செயல்களுக்கு ஒரு குறிப்பிட்ட திசையை புத்திசாலித்தனமாக நிர்ணயம் செய்யும்வரை, காற்றில் நிழற்கோட்டைகளைக் கட்டி அதில் திரிந்து கொண்டு தான் இருப்பீர்கள். (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-22)
'ஒருமுகப்படுத்துதல்' என்று நாம் சொல்லும்போது ‘ஒன்றை’ நோக்கி மனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொருள்படும். இங்கு ‘ஒன்று’ என குறிப்பிடப்படுவது இரண்டாவது என்றில்லாமல் இருக்கும் ஒன்றாகும்; அந்த ‘ஒன்றே’, தான் பலவாக ஆகவேண்டும் என்றும் சங்கல்பம் செய்த ஒன்றாகும். - பாபா