azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 04 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 04 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The life story of Narakasura reveals the magnitude of his wickedness. His entire realm was plunged in darkness. There were no lights in the homes or in the streets. He had imprisoned thousands of princesses and tortured innumerable women. Unable to bear these indignities, the women appealed to Krishna for succour. As Narakasura had inflicted sufferings on women, he had to be punished by a woman. For this reason, Krishna took Sathyabhama with Him and destroyed him in battle. Deepavali has to be observed as a day for getting rid of all the bad qualities in us, symbolised by the demon Narakasura. The Gopikas who were freed on that day represent the imprisoned good qualities in us. They should be manifested effulgently. This is the inner significance of the festival. As long as the demonic qualities remain, one will be immersed in darkness. I desire that our festivals and the holy days be observed in the right spirit, with an understanding of their inner significance. ( Divine Discourse, Nov 09,1998)
YOU CAN LIGHT A MILLION LAMPS FROM ONE; YET, THE FIRST WILL NOT SUFFER A BIT! LOVE TOO IS LIKE THIS. SHARE IT WITH A MILLION, IT WILL STILL BE AS BRIGHT AS WHEN IT WAS ALONE. – BABA
நரகாசுரனின் வாழ்க்கை வரலாறு அவனது அக்கிரமத்தின் அளவை வெளிப்படுத்துகிறது. அவனுடைய ராஜ்யம் முழுவதும் இருள் சூழ்ந்து இருந்தது. வீடுகளிலோ அல்லது வீதிகளிலோ விளக்குகள் ஏதும் இருக்கவில்லை. அவன் ஆயிரக்கணக்கான இளவரசிகளை சிறையில் அடைத்து, எண்ணற்ற பெண்களை சித்ரவதை செய்தான். இந்த அவமானங்களைத் தாங்க முடியாமல், பெண்கள் கிருஷ்ணரிடம் உதவி கேட்டு முறையிட்டனர். நரகாசுரன் பெண்களுக்கு துன்பம் விளைவித்ததால், அவனை ஒரு பெண்ணால் தான் தண்டிக்க வேண்டி இருந்தது. இந்த காரணத்தால் தான், கிருஷ்ணர் தன்னுடன் சத்யபாமாவை அழைத்துச் சென்று, அவனைப் போரில் வதம் செய்தார். நரகாசுரன் என்ற அசுரனால் குறிப்பிடப்படுகின்ற நம்மிடம் உள்ள அனைத்து கெட்ட குணங்களையும் போக்குவதற்கான நாளாக தீபாவளியை அனுசரிக்க வேண்டும். அன்று விடுதலை அடைந்த கோபிகைகள், நம்முள் பொதிந்திருக்கும் நற்குணங்களைக் குறிக்கிறார்கள். அவற்றை சுடர்விட்டு பிரகாசிக்கும்படி வெளிப்படுத்த வேண்டும். இதுவே இப்பண்டிகையின் உள்ளர்த்தமாகும். அசுர குணங்கள் இருக்கும் வரை, ஒருவர் இருளில் ஆழ்ந்திருப்பார். நம்முடைய பண்டிகைகள் மற்றும் புனித நாட்களை அவற்றின் உள்ளார்ந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, சரியான உணர்வுடன் அனுசரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். (தெய்வீக அருளுரை, நவம்பர் 09, 1998)
ஒரு தீபத்திலிருந்து நீங்கள் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றலாம்; இருந்தாலும், அது இம்மியளவும் பாதிப்படைவதில்லை! ப்ரேமையும் கூட அப்படிப்பட்டதே. அதை லட்சக்கணக்கானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அது தனித்து இருந்த போது இருந்தபடியே தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும். – பாபா