azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 02 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 02 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The fifth is the flower of Shanti (peace). One should remain peaceful through all the vicissitudes of life. Only then can one attain divine grace. Great devotees like Tyagaraja, Tukaram and Droupadi underwent many hardships. They bore all sufferings with patience. Tyagaraja said, "One cannot attain happiness without inner peace." Man needs peace at the physical, mental and spiritual levels. Peace is not present in the external world. It is present within. You are the embodiment of peace. In worldly life, there are bound to be many hardships, but one should not be perturbed. One should bear all sufferings with fortitude and patience. Human life is given not merely to enjoy worldly pleasures like birds and beasts. Life becomes meaningful only when one experiences the peace that originates from the heart.( Divine Discourse, Aug 22,2000)
“I – WANT – PEACE”. ‘I’ IS EGO, ‘WANT’ IS DESIRE. REMOVE EGO AND DESIRE AND YOU HAVE PEACE. -BABA
ஐந்தாவது சாந்தி எனும் ‘புஷ்பம்’. வாழ்க்கையின் எல்லா ஏற்றத்தாழ்வுகளிலும் ஒருவர் சாந்தமாக இருத்தல் வேண்டும். அதன் பிறகே, ஒருவர் இறைஅருளைப் பெற முடியும். தலைசிறந்த பக்தர்களான தியாகராஜர், துக்காராம், திரௌபதி ஆகியோர் பல இன்னல்களை அனுபவித்தனர். அவர்கள் எல்லா கஷ்டங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டனர். தியாகராஜர், "அகச்சாந்தி இன்றி எவரும் சந்தோஷத்தை அடைய முடியாது" என்று கூறினார். உடல், மனம் மற்றும் ஆன்மிக நிலைகளில் மனிதனுக்கு சாந்தி தேவைப்படுகிறது. சாந்தி புறவுலகில் இல்லை. அது அகத்திலே இருக்கிறது. நீங்களே சாந்தியின் திருவுருவம். உலக வாழ்வில் பல இன்னல்கள் இருக்கத்தான் செய்யும், ஆனால் ஒருவர் மனம் கலங்கக் கூடாது. எல்லாத் துன்பங்களையும் மனஉறுதியுடனும் பொறுமையுடனும் தாங்கிக்கொள்ள வேண்டும். பறவைகள் மற்றும் மிருகங்களைப் போல உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக மட்டுமே மனிதப்பிறவி கொடுக்கப்படவில்லை. இதயத்திலிருந்து எழும் சாந்தியை ஒருவர் அனுபவிக்கும் போது தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட் 22, 2000 )
"எனக்கு-அமைதி-வேண்டும்". இதில் ‘எனக்கு (நான்)’ என்பது அகந்தை. ‘வேண்டும்’ என்பது ஆசை. ஆசையையும் அகந்தையையும் நீக்க, உங்களுக்கு அமைதி தானாக கிடைத்துவிடுகிறது! – பாபா