azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 18 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 18 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Every aspirant must enter the path of inquiry. Only then can the conviction dawn and grow that nature and all learning connected with nature are unreal; only then will these be given a relative value, not an absolute value! They are, of course, to be learnt and experienced as necessary for existence, as a daily routine. However, they should not be mistaken to be the highest knowledge, the unchanging eternal truth. That mistake, if committed, leads to an agitated mind (a-santhi). Agitation produces worry and anxiety, which in turn destroys peace. If you aspire for peace and equanimity, the basic thing is to have faith in the temporary nature of Nature and be engaged in the uninterrupted contemplation of the changeless Godhead. Therefore, do not be bound by selfish attachments. Engage yourself in the discharge of your duties. Do not allow yourself to be gladdened by success or saddened by failure. Be ready to renounce all that is harmful. Then, through discrimination, you can beat the drum of victory! (Prasanthi Vahini,Ch.19)
TO GET ANGRY IS BUT THE EFFORT OF A MOMENT; BUT TO REMAIN PEACEFUL, TO BECOME UNAFFECTED BY THE UPS AND DOWNS OF LIFE, IS THE RESULT OF YEARS OF TRAINING IN SPIRITUALITY. – BABA
ஒவ்வொரு ஆன்மிக சாதகரும் ஆத்ம விசாரப் பாதையில் செல்ல வேண்டும். அதன் பிறகு மட்டுமே, இயற்கையும், இயற்கையைச் சார்ந்த எல்லாக் கல்வியும் மாயை என்ற திடநம்பிக்கை தோன்றி வளர முடியும்; அப்போதுதான் இவற்றிற்கு முழுமையான மதிப்பை அல்லாது ஒப்பீடான மதிப்பு அளிக்கமுடியும்! அவற்றை, வாழ்க்கைக்குத் தேவையான ஒரு அன்றாட வழக்கமாக கற்றுக் கொண்டு அனுபவிக்கத்தான் வேண்டும். ஆனால், அவற்றை மிக உயர்ந்த ஞானமான, மாறாத, நிரந்தர சத்தியம் என்று தவறாகக் கருதி விடக்கூடாது. அந்தத் தவறை இழைத்துவிட்டால், அது குழப்பமான மனநிலைக்கு (அசாந்தி) இட்டுச் சென்று விடும். மனக்குழப்பம், கவலையையும், பதட்டத்தையும் உருவாக்கி, சாந்தியை குலைத்துவிடுகிறது. நீங்கள் சாந்தி மற்றும் சமச்சீரான நிலையைப் பெற வேண்டுமென்றால், இயற்கையின் தாற்காலிகத் தன்மையில் நம்பிக்கை வைத்து, மாற்றமே இல்லாத இறைவனை இடையறாது தியானிப்பதில் ஈடுபடுவதே அடிப்படையாகும். எனவே, சுயநலமான பற்றுதல்களில் கட்டுண்டு இருக்காதீர்கள். உங்களுடைய கடமைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டு இருங்கள். வெற்றியால் சந்தோஷமடைவதற்கோ அல்லது தோல்வியால் துயரமடைவதற்கோ உங்களை நீங்கள் அனுமதிக்காதீர்கள். தீமை பயக்கும் எல்லாவற்றையும் துறந்து விடுவதற்குத் தயாராக இருங்கள். பின்னர், பகுத்தறிவின் மூலம் நீங்கள் வெற்றி முரசு கொட்ட முடியும்! (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-19)
கோபமடைதல் என்பது ஒரு கணத்தின் நிகழ்வு! ஆனால், வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை ஏற்று அமைதியாக பாதிப்படையாது இருப்பதென்பதோ பல ஆண்டுகள் ஆன்மிக பயிற்சி செய்வதால் ஏற்படும் விளைவு. - பாபா