azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The Navaratri festival is observed by contemplating on God for ten days, cleansing one's self of all impurities, to experience the Divinity within. The penultimate day of the festival is dedicated to what is termed Aayudha Pooja (worship of weapons). The weapons to be worshipped are the divine powers in man. When the Divine is worshipped in this way, one is bound to progress spiritually. On the contrary, the usual practice now is to treat the Divine and the devotee as separate from each other. This is wrong. The Divine is omnipresent and is in everyone and in every object. This truth has to be realised from the message conveyed by the process of inhalation and exhalation that goes on in everyone 21,600 times in a day. Each act of respiration proclaims the message: So-Ham (I am He). With every breath, the message is proclaimed: "I am God." Realising this oneness, all actions should be done as an act of dedication to the Divine.( Divine Discourse, Oct 14,1994)
LOVE IS THE GREATEST GIFT GOD HAS GIVEN TO A HUMAN BEING. THE VALUE OF ANY MATERIAL OBJECT IN THIS WORLD CAN BE ASSESSED; BUT NOT THE VALUE OF LOVE. - BABA
பத்து நாட்கள் இறைவனை தியானித்து, ஒருவரது அனைத்து அசுத்தங்களைக் களைந்து, உள்ளுறையும் தெய்வீகத்தை அனுபவிப்பதற்காகவே, நவராத்திரி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. பண்டிகையின் இறுதி நாளுக்கு முந்தைய நாள், ஆயுத பூஜைக்கு (ஆயுதங்களின் ஆராதனை) அர்ப்பணிக்கப்படுகிறது. மனிதனுள் உறையும் தெய்வீக சக்திகளே ஆராதிக்கப்பட வேண்டிய ஆயுதங்கள். தெய்வத்தை இவ்வாறு வழிபடும்போது, ஒருவர் கண்டிப்பாக ஆன்மிகத்தில் முன்னேறுவார். மாறாக, இறைவனும் பக்தரும் ஒருவருக்கொருவர் தனித்தனியானவர்கள் எனக் கருதுவது தான் இப்போது வழக்கமான நடைமுறையாக உள்ளது. இது தவறானது. இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து, ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு பொருளிலும் உறைகின்றான். ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு நாளும் 21,600 முறை நிகழும் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் செய்முறை அளிக்கும் செய்தியின் மூலம் இந்த உண்மை உணரப்பட வேண்டும். ஒவ்வொரு சுவாசமும், "ஸோ-ஹம்" அதாவது “அவனே நான்” என்ற செய்தியை அறிவிக்கிறது. ஒவ்வொரு மூச்சுடனும் "நானே இறைவன்" என்ற செய்தி அறிவிக்கப்படுகிறது. இந்த ஏகத்துவத்தை உணர்ந்து எல்லா செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பாக செய்ய வேண்டும். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 14, 1994)
ப்ரேமையே இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள மிகச்சிறந்த பரிசாகும். இந்த உலகில் எந்தப் பொருளின் விலையையும் மதிப்பிட முடியும்; ஆனால் ப்ரேமையின் விலையை மதிப்பிட முடியாது. - பாபா