azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Aspirants for mental peace should reduce the luggage they have to care for; the more the luggage, the greater the bother. A house cluttered with lumber will be dark, dusty, and without free movement of fresh air, it will be stuffy and suffocating. The human body too is a house; do not allow it to be cluttered with curios, trinkets, trash and superfluous furnishings. Let the breeze of holiness blow as it wills through it; let not the darkness of blind ignorance desecrate it. Life is a bridge over the sea of change; pass over it, but do not build a house on it. Hoist the Prasanthi Flag, on the temple, that is your heart. Follow the prescription it teaches - subdue the six enemies that undermine the natural bliss in man, ascend the Yoga stage when the agitations are stilled and allow the splendour of the Divinity within (the Atma) to shine forth, embracing all for all time.(Divine Discourse, Oct 12,1969)
REDUCE WANTS, LIVE SIMPLY, THAT IS THE WAY TO HAPPINESS. - BABA
மனஅமைதியை நாடும் சாதகர்கள், அவர்கள் பராமரிக்க வேண்டிய சுமையைக் குறைக்க வேண்டும்; சுமை எவ்வளவு அதிகமோ, தொந்தரவும் அவ்வளவு அதிகமே. மரக்கட்டைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு வீடு இருட்டாக, தூசிபடிந்து, தூயகாற்று புகமுடியாமல் அடைசலாகவும், மூச்சைத் திணற வைப்பதாகவும் இருக்கும். மனித உடலும் கூட ஒரு வீடு போன்றதே; அதை வினோதமான பொருட்கள், அற்பப்பொருட்கள், குப்பை மற்றும் தேவைக்கு அதிகமான சாமான்கள் ஆகியவற்றால் அடைத்து வைக்க அனுமதிக்காதீர்கள். புனிதத்துவத்தின் தென்றல் தன் இஷ்டப்படி அதனுள் வீசட்டும்; அறியாமை எனும் குருட்டுத்தனத்தால் அது சிதைக்கப்படாது இருக்கட்டும். வாழ்க்கை என்பது மாற்றம் எனும் கடலின் மேல் அமைந்த பாலமாகும். அதில் ஏறி கடந்து செல்லுங்கள்; அதன் மீது வீட்டைக் கட்டாதீர்கள். உங்கள் இதயம் எனும் கோயிலில் பிரசாந்தி கொடியை ஏற்றுங்கள். அது பரிந்துரைக்கும் போதனையைப் பின்பற்றுங்கள் – அதாவது மனிதனுள் உள்ள இயல்பான ஆனந்தத்தை வேரறுக்கும் ஆறு எதிரிகளை அடக்கி, மனக்கிளர்ச்சிகள் அடங்கிய யோக நிலைக்கு உயர்ந்து, உள்ளுறையும் தெய்வீகத்தின் (ஆத்மா) ஒளி எல்லாவற்றையும் எப்போதும் அரவணைத்துப் பிரகாசிக்க அனுமதியுங்கள். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 12, 1969)
தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள், எளிமையாக வாழுங்கள்,
அதுவே சந்தோஷத்திற்கான வழியாகும். - பாபா