azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 11 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 11 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Dasara is the festival that celebrates the victory of the forces of good over the foes that resist the progress of man towards light. The sages who have decided on these festivals have a high purpose. They want us to imbibe the inner meaning and use each such day as a step in sadhana, as a reminder of the journey each person has to undertake alone to the Lord’s Feet. The forces of good (devas) are combating the forces of evil (asuras) in every living being, and if they only rely on Mahashakti, the great Divine Force that fosters and fends the Universe, they can easily win and reach the goal. People try to reform the world without making any effort to reform themselves; for, it is easier to give advice and admonish others than take the advice and advance ourselves. Strengthen the inner urges towards virtue and goodness; become impregnable there; then you can set about reforming the others.(Divine Discourse Oct 15,1966)
THROUGH THE TEMPLE, THE LORD CAN BE SEEN. THROUGH THE BODY,
THE ATMA THAT IS WITHIN CAN BE REALISED. - BABA
ஞானஒளியை நோக்கிச் செல்லும் மனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிரிகளை நல்ல சக்திகள் வென்றதைக் கொண்டாடுவதே தசரா பண்டிகை. இந்தப் பண்டிகைகளை நிர்ணயித்த முனிவர்களுக்கு ஓர் உயர்ந்த நோக்கம் உள்ளது. இந்த உள்ளர்த்தத்தை நாம் கிரஹித்துக் கொண்டு, இப்படிப்பட்ட ஒவ்வொரு நாளையும் ஆன்மிக சாதனையின் ஒரு படியாகவும், இறைவனது பாதாரவிந்தங்களை நோக்கி ஒவ்வொரு மனிதனும் தனியாக மேற்கொள்ள வேண்டிய பயணத்தை நினைவூட்டுவதற்கும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு உயிரினத்துள்ளும், நல்ல சக்திகள் (தேவர்கள்) தீய சக்திகளை (அசுரர்கள்) எதிர்த்துப் போராடிக் கொண்டு இருக்கின்றன; இந்த ப்ரபஞ்சத்தைப் போஷித்துக் காக்கும் மகோன்னதமான தெய்வீக சக்தியான மஹாசக்தியை மட்டும் அவை சார்ந்திருக்குமானால், அவை எளிதாக வெற்றி பெற்று, இலக்கை அடைய முடியும். மனிதர்கள் தங்களைத் தாங்களே சீர்திருத்திக்கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல், உலகை சீர்திருத்த முற்படுகிறார்கள்; ஏனெனில், அறிவுரையை ஏற்றுக்கொண்டு நம்மை நாமே முன்னேற்றிக் கொள்வதை விட, பிறருக்கு அறிவுரை அளித்து கண்டிப்பது மிகவும் எளிதானதாகும். நல்லொழுக்கம் மற்றும் நற்குணத்தை நோக்கிய அகத்தூண்டுதல்களை வலுப்படுத்திக் கொண்டு அதில் அசைக்க முடியாதவராக ஆகுங்கள்; அதன் பிறகு நீங்கள் மற்றவர்களை சீர்திருத்தச் செல்லலாம். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 15, 1966)
ஆலயத்தின் மூலம் ஆண்டவனைக் காண முடியும்;
உடலின் மூலம் உள்ளுறையும் ஆத்மாவை உணர முடியும். - பாபா