azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The significance of Durga, Lakshmi and Saraswati has to be rightly understood. They represent three kinds of potencies in man. Ichcha Shakti (will power), Kriya Shakti (power of action), and Jnana Shakti (power of discrimination). Saraswati is manifest in man as the power of Vak (speech). Durga is present in the form of dynamism, power of action. Lakshmi is manifest in the form of willpower. The body indicates Kriya Shakti. The mind is the repository of Ichcha Shakti. Atma is Jnana Shakti. Kriya Shakti comes from the body, which is material. The power that activates the body that is inert and makes it vibrant is the Ichcha Shakti. The power that induces the vibrations of the Ichcha Shakti is the Jnana Shakti, which causes radiation (of energy). These three potencies are represented by the mantra: Om Bhur-Bhuvas-Suvah. Bhur represents Bhuloka (earth). Bhuvah represents the Life-force and also means Conscience in man, Suvah represents the power of radiation. All three are present in man.( Divine Discourse, Oct 9.1994)
ALL POWERS ARE WITHIN YOU. ALL THAT IS NEEDED IS THE EXTERNAL MANIFESTATION OF THE POWERS WITHIN YOU. - BABA
துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் உட்கருத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மனிதனுள் இருக்கும் மூன்று விதமான சக்திகளைக் குறிக்கிறார்கள். அவையே இச்சா சக்தி (சங்கல்ப ஆற்றல்), க்ரியா சக்தி (செயல் ஆற்றல்), மற்றும் ஞான சக்தி (பகுத்தறியும் ஆற்றல்) ஆகும். சரஸ்வதி வாக்-சக்தியாக (பேச்சு) மனிதனில் வெளிப்படுகிறார். துர்கா இயக்குசக்தியின் வடிவமாக, செயல் ஆற்றலாக இருக்கிறார். லட்சுமி சங்கல்ப சக்தியின் வடிவத்தில் வெளிப்படுகிறாள். உடல் க்ரியா சக்தியைக் குறிக்கிறது. மனம் இச்சாசக்தியின் களஞ்சியமாகும். ஆத்மாவே ஞானசக்தியாகும். பொருட்களால் ஆன உடலிலிருந்து க்ரியா சக்தி வருகிறது. ஜடமாக இருக்கும் உடலை செயல்படுத்துகின்ற மற்றும் துடிப்புள்ளதாக ஆக்கும் சக்தி இச்சா சக்தியாகும். இச்சா சக்தியின் அதிர்வுகளைத் தூண்டும் சக்தியே ஞான சக்தி; இதுவே கதிரியக்கத்தை (சக்தியின்) ஏற்படுத்துகிறது. ஓம் பூர்-புவஸ்-சுவ: என்ற மந்திரத்தினால் இந்த மூன்று சக்திகளும் குறிப்பிடப்படுகின்றன. ‘பூர்’ என்பது பூலோகத்தைக் (பூமி) குறிக்கிறது. ‘புவ’ என்பது ப்ராண சக்தியைக் குறிப்பதோடு, மனிதனில் உள்ள மனச்சாட்சியும் ஆகும். ‘சுவ’ என்பது கதிரியக்க சக்தியாகும். இந்த மூன்றுமே மனிதனுள் இருக்கின்றன. (தெய்வீக அருளுரை, அக்டோபர் 9, 1994)
அனைத்து சக்திகளும் உங்களுள் இருக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுள் உள்ள சக்திகளை வெளிப்படுத்துவது ஒன்றே. - பாபா