azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 05 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 05 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
God is present in everyone in the form of love. Wherever you go, He is with you. He is the eternal witness. Share your love with others and receive their love in turn. Love is your greatest virtue. Love confers ultimate joy and bliss. God resides in the heart filled with love. Hence, it’s essential you fill your heart with love. Where there is love, there is God. You don't need to search for Him. He is always in you, with you, around you, above you and below you. Adhere to the principle of love. Never hate anyone. Hatred is your worst enemy. Once you develop love in you, hatred will naturally vanish. If you were to come across your bitter rival, greet him with love. He too will reciprocate the same feeling. How can you expect love from others when you don’t have any love for them? It is love and love alone that I practice and propagate. Try to understand the power of love. It is your greatest wealth.( Divine Discourse, Oct 5,2003)
WHAT DOES GOD EXPECT FROM YOU? IT IS ONLY YOUR LOVE. LOVE IS THE ONLY TAX THAT YOU PAY TO GOD FOR ALL THAT HE HAS GIVEN YOU. - BABA
இறைவன் ப்ரேமையின் வடிவத்தில் அனைவருள்ளும் உறைகிறான். நீங்கள் எங்கு சென்றாலும், அவன் உங்களுடன் இருக்கிறான். அவன் நிரந்தர சாக்ஷிபூதமானவன். உங்களுடைய ப்ரேமையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களின் ப்ரேமையைத் திரும்பப் பெறுங்கள். ப்ரேமையே உங்களுடைய மிக உயர்ந்த நற்பண்பாகும். ப்ரேமை, மிகுந்த சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் அளிக்கிறது. ப்ரேமை நிறைந்த இதயத்தில் இறைவன் வாசம் செய்கிறான். எனவே, நீங்கள் உங்கள் இதயத்தை ப்ரேமையால் நிரப்பிக்கொள்வது இன்றியமையாததாகும். ப்ரேமை எங்கு இருக்கிறதோ, இறைவன் அங்கு இருக்கிறான். நீங்கள் அவனைத் தேட வேண்டிய அவசியமில்லை. அவன் எப்போதும் உங்களுள், உங்களுடன், உங்களைச் சுற்றி, உங்களுக்கு மேலும், உங்களுக்கு கீழும் இருக்கிறான். ப்ரேம தத்துவத்தைக் கடைபிடியுங்கள். யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு, உங்களுடைய மோசமான எதிரியாகும். ஒருமுறை நீங்கள் உங்களுள் ப்ரேமையை வளர்த்துக் கொண்டால், வெறுப்பு இயல்பாகவே மறைந்து விடும். நீங்கள் உங்களுடைய பரம எதிரியை சந்திக்க நேர்ந்தால், அவருக்கு ப்ரேமையுடன் வாழ்த்துக்கூறுங்கள். அவர் கூட அதே உணர்வை வெளிப்படுத்துவார். உங்களுக்கு மற்றவர்களிடம் ப்ரேமை இல்லையென்றால், நீங்கள் அவர்களிடமிருந்து ப்ரேமையை எப்படி எதிர்பார்க்க முடியும்? நான் கடைப்பிடித்து, பரப்புவது ப்ரேமையையே, ப்ரேமையை மட்டுமே. ப்ரேமையின் சக்தியைப் புரிந்துகொள்ள முயலுங்கள். அதுவே உங்களுடைய மிகப்பெரும் செல்வமாகும். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 5, 2003)
இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? உங்கள் அன்பை மட்டுமே. இறைவன் உங்களுக்கு அளித்துள்ள அனைத்திற்கும் அன்பு என்கின்ற வரியை மட்டுமே நீங்கள் அவனுக்கு செலுத்துகிறீர்கள்! - பாபா