azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
While you are still in your youth, the kind of sacred thoughts that generate in your mind and the sacred experiences you go through will determine the future for you. A young lad by the name Mohandas Karamchand attended the drama of Harishchandra, whereby he learnt the importance of truth. He went back to his mother and told her that he would stick to truth in his later life, and by sticking to truth, Mohandas Karamchand evolved into being known as Mahatma Gandhi. The kind of pictures that we witness today, and the kind of dramas that we see today, or the kind of wall posters that we see are such that they cause distortions in your mind and destroy the very human nature and the sweetness of your heart. Because of the destructive nature of what you see, you are getting such bad ideas.( Divine Discourse, May 20,1976)
THE YOUNG AGE, BEING IMPRESSIONABLE AND FORMATIVE, IS THE RIGHT AGE TO DEVELOP SACRED IDEAS AND PRACTISE SPIRITUAL SADHANAS. – BABA
நீங்கள் இளம் வயதில் இருக்கும்போது, உங்களுடைய மனதில் தோன்றும் பவித்ரமான சிந்தனைகளும், நீங்கள் அனுபவிக்கும் புனிதமான அனுபவங்களும், உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற பெயர் கொண்ட ஒரு இளைஞர், ஹரிச்சந்திரனின் நாடகத்தைப் பார்த்து, அதிலிருந்து சத்தியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொண்டார். அவர் தன் தாயிடம் திரும்பிச் சென்று, அவருடைய பிற்கால வாழ்க்கையில் சத்தியத்தைப் பின்பற்றுவதாக கூறினார்; சத்தியத்தைப் பற்றி ஒழுகியதால், மோகன்தாஸ் கரம்சந்த், மஹாத்மா காந்தி என்ற பெயர் கொண்டவராக உருவானார். இன்று நாம் பார்க்கும் சினிமாப் படங்கள், இன்று காணும் நாடகங்கள் அல்லது சுவரொட்டிகள் போன்றவை உங்கள் மனதில் வக்கிரங்களை ஏற்படுத்தி, மனித இயல்பையும் உங்கள் இதயத்தின் இனிமையையும் அழித்து விடுகின்றன. நீங்கள் காண்பவையின் சீரழிக்கும் இயல்பினால் தான் நீங்கள் இப்படிப்பட்ட தீய சிந்தனைகளைப் பெறுகிறீர்கள். (தெய்வீக அருளுரை, மே 20, 1976)
இளமைப் பருவம் எதையும் எளிதில் கிரஹித்துக் கொண்டு வளரக்கூடியது; ஆகையால், புனிதமான சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதற்கும், ஆன்மிக சாதனைகளை மேற்கொள்வதற்கும் அது ஏற்ற பருவமாகும். - பாபா