azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 25 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 25 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The mind is very powerful. Without understanding its power, man feels proud of his limited knowledge. It is utter foolishness. He feels he knows everything. He is diverting his mind on trivial objectives without trying to know the Atma. This is the reason why man is subjected to difficulties and misery. You are responsible for your happiness or misery. You should not blame others for your condition. As you are unable to realise your true Self, you are experiencing the dualities of pleasure and pain. Once you know your true Self, you will not be affected by them. It is a sin to blame others for your suffering. You suffer because of lack of morality in your feelings and of improper conduct. Your destiny is based on your character. Character is based on actions. Actions are based on thoughts. Therefore, cultivate morality and sacred thoughts.( Divine Discourse, Jan 14,2002)
TAKE CARE OF YOUR CHARACTER. YOUR HAPPINESS AND YOUR REPUTATION WILL THEN BE AUTOMATICALLY TAKEN CARE OF. - BABA
மனம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதனுடைய சக்தியை அறியாது, மனிதன் தன் சிற்றறிவைப் பற்றி கர்வம் கொள்கிறான். இது முற்றிலும் முட்டாள்தனமாகும். அவன் தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணுகிறான். ஆத்மாவைப் பற்றி அறிந்துகொள்ள முயலாமல், அற்பமான நோக்கங்களின் மீது அவன் மனதை திசை திருப்பிவிடுகிறான். மனிதன் இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாவதற்கு இதுவே காரணம். உங்களுடைய சுகதுக்கத்திற்கு நீங்கள் தான் காரணம். உங்களுடைய நிலைமைக்கு பிறரை நீங்கள் குறை கூறக்கூடாது. நீங்கள் உங்களுடைய ஆத்ம தத்துவத்தை உணர முடியாததால், நீங்கள் சுகம்-துக்கம் எனும் இருமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவுடன், நீங்கள் அவற்றால் பாதிக்கப்படமாட்டீர்கள். உங்களுடைய துயரத்திற்கு பிறரை குறை கூறுவது பாவமாகும். உங்களுடைய உணர்வுகளில் ஒழுக்கமின்மை மற்றும் முறையற்ற நடத்தை காரணமாக நீங்கள் துன்பப்படுகிறீர்கள். நீங்கள் அடையவேண்டிய இலக்கு, உங்கள் குணநலனைப் பொறுத்தது. குணநலன், செயல்களை பொறுத்தது. செயல்கள், சிந்தனைகளைப் பொறுத்தது. எனவே, நல்லொழுக்கத்தையும், புனிதமான சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். (தெய்வீக அருளுரை, ஜனவரி 14, 2002)
உங்களுடைய குணநலனில் கவனமாக இருங்கள். உங்களுடைய மகிழ்ச்சியும், கண்ணியமும் தானாகவே சீராக அமைந்து விடும். – பாபா