azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 22 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 22 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Be bound to the Atma in you; take rest and refuge in That and meditate on That without interruption. Then, all bonds will loosen off themselves, for the bond with which you attach yourself to the Lord or the Atma has the power of unbinding all other bonds. The “unattached” have real love toward all. Their love is not only pure, it is divine as well. It is the embodiment of peace. Without a doubt, one can attain the Lord if one becomes devoid of all passion or attachment (raga) and engages in the actions detailed above. Renunciation or detachment (vairagya), of course, does not mean the giving up of hearth and home, or of high estate and even kingdoms. It is the understanding of the divinity immanent in everything, the fading away of all the distinct names and forms, and the bliss of experiencing in everything and every place the Divine, which is its reality.( Prasanthi Vahini, Ch 13)
A DETACHED OUTLOOK WILL HELP YOU EXPERIENCE GOD IN EVERY BEING AND IN EVERY PLACE. - BABA
உங்களுள் இருக்கும் ஆத்மாவுடன் இணைந்திருங்கள்; அதில் இளைப்பாறி, அடைக்கலம் புகுந்து, அதனை இடையறாது தியானம் செய்யுங்கள். உங்களை நீங்களே இறைவன் அல்லது ஆத்மாவுடன் இணைத்துக் கொள்ளும் பந்தத்திற்கு, மற்ற எல்லா பந்தங்களையும் விடுவிக்கும் சக்தி இருப்பதால், பின்னர், அனைத்து பந்தங்களும் தானாகவே தளர்ந்துவிடும். இந்த "பற்றற்றவர்" எல்லோரிடமும் உண்மையான ப்ரேமை கொண்டவர். அவர்களுடைய ப்ரேமை பரிசுத்தமானது மட்டுமல்ல, அது தெய்வீகமானதும் கூட. அது சாந்தியின் திருவுருவம். ஒருவர் அனைத்து இச்சைகள் அல்லது பற்றுதல் (ராகம்) இல்லாதவராக ஆகி, மேற்கூறிய செயல்களில் ஈடுபடுவாரேயானால், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் இறைவனை அடைய முடியும். பற்றின்மை அல்லது வைராக்கியம் என்றால், வீடு, வாசலையோ அல்லது உயர்ந்த சொத்துக்களையோ, ஏன் ராஜ்யங்களையோ கூடத் துறந்துவிடுவது என்று பொருளல்ல. இது, எல்லாவற்றிலும் உள்ள தெய்வீகத்தைப் புரிந்து கொண்டு, அனைத்து தனிப்பட்ட நாம, ரூபங்கள் மறைந்து, மேலும், அனைத்திலும் மற்றும் ஒவ்வொரு இடத்திலும் அதன் உண்மை நிலையான தெய்வீகத்தை அனுபவிக்கும் ஆனந்தமாகும். (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-13)
ஒவ்வொரு உயிரினத்திலும், ஒவ்வொரு இடத்திலும் இறைவனை நீங்கள் அனுபவிப்பதற்கு பற்றற்ற கண்ணோட்டம் உதவும். - பாபா