azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 10 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 10 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Man is bound by three tendencies. The first is the longing to possess (kama). When that longing fails, anger (krodha) raises its hood. When desires are fulfilled and the thing is gained, the third tendency, greed (lobha) overtakes him. If one's desire is beneficial, God will shower His Grace. Ganesha has no desire, no anger, no greed. His Grace is available for all who seek good and godly goals. Look at the vehicle which He has chosen, the mouse! The mouse is a creature that is led, even to destruction, by vasana (smell of things). Men are all victims of preferences and predilections stamped on our minds from our past lives (vasana). Ganesha smothers and suppresses the vasanas which misdirect man and create misfortune. Association with God, as vehicles, ornaments, accessories or servants of Gods, endows even objects, animals and men with special sacred status! In this case the mouse has been honoured, it shares the worship offered to Ganesha.( Divine Discourse Sep 18,1985)
THE ELEPHANT-HEAD OF LORD GANESHA SYMBOLISES INTELLIGENCE, DISCRIMINATION AND WISDOM. - BABA
மனிதன் மூன்று குணங்களால் கட்டுண்டவன். முதலாவது, ஒன்றை அடைவதற்கான ஏக்கம் (காமம்). அந்த ஏக்கம் நிறைவேறாவிட்டால், கோபம் (க்ரோதம்) தன் தலையைத் தூக்குகிறது. ஆசைகள் நிறைவேறி, வேண்டிய பொருள் கிடைத்துவிட்டால், மூன்றாவது இயல்பான பேராசை (லோபம்) அவனை ஆட்கொள்கிறது. ஒருவருடைய ஆசை பயனுள்ளதாக இருந்தால், இறைவன் அவனுடைய அருளைப் பொழிவான். கணேசருக்கு ஆசையோ, கோபமோ, பேராசையோ இல்லை. நல்லவை மற்றும் தெய்வீகமான குறிக்கோள்களை நாடும் அனைவருக்கும் அவனுடைய அருள் கிடைக்கிறது. அவன் தேர்ந்தெடுத்துள்ள வாகனமான மூஞ்சூறைப் பாருங்கள்! தன் அழிவிற்கும் கூட இட்டுச்செல்லும் அளவிற்கு வாசனைகளால் (பொருட்களின் வாசனைகள்) ஈர்க்கப்படும் ஒரு ஜந்து மூஞ்சூறு ஆகும். நம் முந்தைய பிறவிகளில், நம் மனங்களில் பதிந்துவிட்ட விருப்பு வெறுப்புகளால் (வாசனைகள்) மனிதர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களே. மனிதனை தவறாக வழிநடத்தி, துரதிருஷ்டத்தை உருவாக்கும் வாசனைகளை கணேசர் அடக்கி ஆள்கிறார். இறைவனோடு இணைந்து, வாகனங்களாக, ஆபரணங்களாக, துணைக்கருவிகளாக அல்லது சேவகர்களாக இருக்கும்போது, மிருகங்கள், மனிதர்கள் ஏன் பொருட்களுக்கும் கூட தனிச்சிறப்புள்ள புனிதமான அந்தஸ்து கிடைத்துவிடுகிறது! இங்கு, மூஞ்சூறு கௌரவிக்கப்பட்டு, கணேசருக்கு அளிக்கப்படும் வழிபாட்டைப் பகிர்ந்து கொள்கிறது. (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 18, 1985)
விநாயகப் பெருமானின் யானை முகம், புத்தி, பகுத்தறிவு மற்றும் ஞானத்தைக் குறிக்கிறது. – பாபா