azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The Lord's family is our ideal, maintaining harmony and peace in spite of antagonistic elements present amongst them. The vehicles of Shiva (the bull), Parvathi (the lion), Ganesha (the mouse) and Subrahmanya (the peacock) in their natural state are inimical to each other. But living in the presence of the Lord, they shed their enmity and live peacefully. Harmony in the Divine family shows that where there is Divinity, there is peace and amity! Hatred and jealousy arise when the Omnipresence of the Divine is forgotten or ignored. Holy days like Vinayaka Chathurti should be celebrated to remind ourselves of sacred truths and to sanctify our minds and lives accordingly. They should not be treated as holidays for feasting and merry-making. Ganapati should be worshipped so that all Ganas (beings) become friendly and helpful to us. Tyagaraja sang that if one gets Lord's grace (deivanugraham) all planets (grahas) will be in his grasp. We must purify our hearts so that God may shower His grace on us.(Divine Discourse, Sep 10,1984)
DO NOT FORGET THE INNER SIGNIFICANCE OF ALL WORSHIP. ALL EXTERNAL ACTIVITIES ARE NECESSARY ONLY TO HELP YOU TO GET INTO THE SPIRIT OF NON-DUALITY AND EXPERIENCE UNITY IN DIVERSITY. – BABA
குடும்பத்தினரிடையே முரண்பாடான கூறுகள் இருந்த போதிலும் நல்லிணக்கத்தையும் சாந்தியையும் கொண்டிருப்பதால் இறைவனின் குடும்பமே நமக்கு இலட்சியமான ஒன்றாகும். சிவனின் வாஹனம் (நந்தி), பார்வதியின் வாஹனம் (சிங்கம்), கணேசரின் வாஹனம் (மூஞ்சூறு), மற்றும் சுப்ரமண்யரின் வாஹனம் (மயில்) ஆகியவை இயற்கையாக ஒன்றுக்கொன்று எதிரிகள். ஆனால், இறைவனின் சன்னிதானத்தில் இருக்கும்போது, அவை தங்களுடைய பகைமையை விட்டுவிட்டு, சாந்தியுடன் வாழ்கின்றன. எங்கு தெய்வீகம் இருக்கிறதோ, அங்கு சாந்தியும், நட்புணர்வும் இருக்கும் என்பதை தெய்வீகக் குடும்பத்தில் இருக்கும் நல்லிணக்கம் எடுத்துக்காட்டுகிறது. அங்கிங்கெனாதபடி இறைவன் எங்கும் நிறைந்திருப்பதை மறக்கவோ அல்லது உதாசீனப்படுத்தவோ செய்யும்போது, வெறுப்பும், பொறாமையும் எழுகின்றன. புனிதமான உண்மைகளை நமக்கு நாமே நினைவூட்டிக் கொண்டு, அதன்படி நமது மனங்கள் மற்றும் வாழ்க்கைகளைப் புனிதமாக்கிக் கொள்வதற்காக, விநாயக சதுர்த்தி போன்ற புனித நாட்களைக் கொண்டாட வேண்டும். அவற்றை உண்டு களிப்பதற்கான விடுமுறை நாட்களாகக் கருதக்கூடாது. எல்லா கணங்களும் (உயிரினங்கள்) நம்முடன் நட்புகொண்டு, நமக்கு உதவுவதற்காக, கணபதியை வழிபட வேண்டும். தியாகராஜர், ஒருவருக்கு இறைவனின் அருள் (தெய்வானுக்ரஹம்) கிட்டிவிட்டால், அனைத்து கிரஹங்களும், அவரது பிடியில் இருக்கும் என்று பாடினார். இறைவன் தன் அருளை நம் மீது பொழிவதற்கு ஏற்றவாறு, நாம் நமது இதயங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 10, 1984)
அனைத்து வழிபாடுகளின் உள்ளார்ந்த தனிச்சிறப்பை மறந்துவிடாதீர்கள். அனைத்து வெளிப்புற செயல்பாடுகளும், நீங்கள் அத்வைத உணர்வைப் பெறுவதற்கு உதவி, வேற்றுமையில் ஒற்றுமையை அனுபவிப்பதற்கு மட்டுமே அவசியமானவை. - பாபா