azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Every devotee hopes ultimately to experience the joy of supreme bliss as a result of their spiritual discipline. But that bliss isn’t something newly earned or acquired; it’s not a new experience to be won by spiritual discipline. It’s always with you, within you; but it can’t be tasted because of the obstacle of ego, which acts as a screen, hiding it from view. One has to tear that veil asunder. What the aspirant needs is spiritual discipline. Then, the ever-existing bliss can be cognized. It doesn’t arise anew; it’s always there. What comes and goes is the screen of “I” and “mine”, which covers the bliss. While trying to remove the screen of “I am the enjoyer” and “these things are mine”, the aspirant shouldn’t hasten frantically and worry too much if the expected bliss isn’t discovered. At such times, peace is an unfailing help. If peace is cultivated well at first, then one can succeed in any task, however difficult!( Prasanthi Vahini,Ch 8)
ANY SADHANA DONE WITH NOBLE FEELINGS WILL YIELD GOOD RESULTS. CONTINUE YOUR SADHANA. ONE DAY OR THE OTHER, YOU WILL GET THE REWARD. - BABA
ஒவ்வொரு பக்தனும், தன்னுடைய ஆன்மிக சாதனையின் ஒரு பலனாக பேரானந்தத்தை இறுதியாக அனுபவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஆனந்தம் புதிதாக சாதிக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட ஏதோ ஒன்றல்ல; அது ஆன்மிக சாதனையின் மூலம் வெல்லப்பட வேண்டிய ஒரு புது அனுபவமும் அல்ல. அது எப்போதும் உங்களுடனும், உங்களுள்ளும் இருக்கிறது; ஆனால், அதை சுவைக்க முடிவதில்லை, ஏனெனில் ஒரு திரை போல் இயங்கும் அகந்தை எனும் தடை அதை பார்வையிலிருந்து மறைத்து விடுகிறது. ஒருவர் அந்தத் திரையைக் கிழித்தெறிய வேண்டும். சாதகருக்குத் தேவை ஆன்மிகக் கட்டுப்பாடே. பின்னர், என்றும் இருக்கும் ஆனந்தத்தை உணர முடியும். அது புதிதாக எழுவதல்ல; அது எப்போதும் அங்கேயேதான் இருக்கிறது. வருவதும் போவதும், “நான்” மற்றும் “எனது” எனும் ஆனந்தத்தை மறைக்கும் திரையே. “அனுபவிப்பவன் நானே” மற்றும் "இந்தப் பொருட்களெல்லாம் என்னுடையவையே" எனப்படும் திரையை விலக்க முற்படும் போது, சாதகர் வெறித்தனமாக அவசரப்படவோ, எதிர்பார்த்த ஆனந்தத்தை கண்டுணராவிட்டால் அதிகம் கவலைப்படவோ கூடாது. இது போன்ற சமயங்களில், சாந்தியின் உதவி கைவிடாதிருக்கும். முதலில் சாந்தியை நன்றாக வளர்த்துக் கொண்டு விட்டால், ஒருவர் எந்தப் பணியிலும் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அதில் வெற்றி பெற முடியும்! (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-8)
சீரிய உணர்வுகளுடன் செய்யப்படும் எந்த ஆன்மிக சாதனையும் நல்ல பலன்களையே தரும். உங்களுடைய சாதனையைத் தொடர்ந்து செய்யுங்கள்; என்றாவது ஒரு நாள் நீங்கள் அதற்கான பலனைப் பெறுவீர்கள். - பாபா