azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Every activity of man is dependent on the energy one derives from the intake of food. The sadhanas one ventures upon depend for their success on the quantity and quality of the food taken by the spiritual aspirant, even during the preliminary preparations recommended by Pathanjali. The most external of the five sheaths that enclose the Atmic core, namely the Annamaya kosha (food sheath) has an impact on all the remaining four. The Annamaya Kosha is the sheath consisting of the material, flesh and bone, built by the food that is consumed by the individual. Food is generally looked down upon by ascetic minded aspirants and seekers, and treated as something which does not deserve attention. But, since the body and the mind are mightily interdependent, no one can afford to neglect it. As the food so the mind, as the mind so the thought, and as the thought, so the act. ( Divine Discourse May 22,1979)
FOOD IS AN IMPORTANT FACTOR WHICH DETERMINES ALERTNESS AND SLOTH,
WORRY AND CALM, THE BRIGHTNESS AND DULLNESS. - BABA
மனிதனின் ஒவ்வொரு செயலும் உட்கொள்ளும் உணவிலிருந்து ஒருவர் பெறும் சக்தியைப் பொறுத்தே இருக்கிறது. சாதகர்கள் மேற்கொள்ளும் ஆன்மிக சாதனைகளின் வெற்றி, அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு மற்றும் தரத்தைப் பொறுத்து இருக்கும்; பதஞ்சலி பரிந்துரைத்த யோகாவின் பூர்வாங்க ஆயத்தங்களின்போதும் கூட இவ்விஷயம் பொருந்தும். ஆத்மாவை சுற்றி இருக்கும் ஐந்து கோசங்களில் வெளிப்புறத்தில் இருக்கும் அன்னமய கோசத்தின் (அன்னத்தால் ஆன உறை) தாக்கம் மற்ற நான்கு கோசங்களின் மீதும் இருக்கும். ஒருவர் உட்கொள்ளும் உணவினால் உருவாக்கப்படும் பொருள், சதை மற்றும் எலும்புகள் அடங்கிய உறையே அன்னமய கோசம். துறவு மனப்பாங்கு கொண்ட சாதகர்களால், உணவு பொதுவாக, தாழ்வானதாகவும், கவனத்திற்கு அருகதை அற்றதாகவும் கருதப்படுகிறது. ஆனால், உடலும் மனமும் ஒன்றை ஒன்று வலுவாகச் சார்ந்திருப்பதால், யாரும் இதை உதாசீனப்படுத்த முடியாது. உணவு எப்படியோ மனம் அப்படியே, மனம் எப்படியோ சிந்தனை அப்படியே, சிந்தனை எப்படியோ, செயல் அப்படியே! (தெய்வீக அருளுரை, மே 22, 1979)
சுறுசுறுப்பு மற்றும் சோம்பல், கவலை மற்றும் அமைதி, புத்திகூர்மை மற்றும் மந்த புத்தி ஆகியவற்றை நிர்ணயிப்பதில் உணவு ஒரு முக்கிய அம்சமாகும். - பாபா