azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Every aspirant is aware of how Droupadi, through her dharma and peace, deserved the grace of the Lord. Though her husbands were mighty heroes and far-famed monarchs, she sought refuge in Lord Krishna, feeling that all others were of no use. But Prahlada did not seek refuge under similar circumstances. At birth, he had surrendered all to the Lord. He knew that the Lord was ever by his side and that he was ever by the side of the Lord, so he had no need to call out to Him for protection. Prahlada was unaware of anything except the Lord; he could not distinguish between one function of the Lord and another. So, how could he pray for protection, when he did not know that He was being punished? For all such God-intoxicated and dedicated souls, prayer is unnecessary. But until that stage is reached, prayer in an attitude of peace is essential for aspirants. Prayer with this attitude will promote equanimity in enjoyment (sama-rasa). (Ch 7, Prasaanthi Vahini)
PRAYER ALONE MAKES LIFE HAPPY, HARMONIOUS AND WORTH LIVING IN THIS UNIVERSE. - BABA
திரௌபதி தனது தர்மம் மற்றும் சாந்தியின் மூலம் எவ்வாறு இறைவனது அருளுக்குப் பாத்திரமானார் என்பதை ஒவ்வொரு ஆன்மிக சாதகரும் அறிவார்கள். அவளது கணவன்மார்கள் மாவீரர்களாகவும், மிகவும் புகழ் வாய்ந்த பேரரசர்களாகவும் இருந்தாலும் கூட, மற்ற அனைவராலும் பயன் இல்லை என்று உணர்ந்து, அவள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் சரணடைந்தாள். ஆனால், இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் பிரஹலாதன் அடைக்கலத்தை நாடவில்லை. பிறவியிலேயே அவன் இறைவனிடம் எல்லாவற்றையும் அர்ப்பணித்து இருந்தான். இறைவன் எப்போதும் தன்னுடனும், தான் எப்போதும் இறைவனுடனும் இருப்பதை அவன் அறிந்திருந்தான்; எனவே, பாதுகாப்பிற்காக இறைவனை அழைக்கவேண்டிய தேவை அவனுக்கு இருக்கவில்லை. பிரஹலாதன் இறைவனைத் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை; இறைவனது ஒரு செயலையும், மற்றொன்றையும் அவனால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. எனவே, தான் தண்டிக்கப்படுகிறோம் என்பதே அவனுக்குத் தெரியாதலால், பாதுகாப்பிற்காக அவன் எப்படி பிரார்த்தனை செய்திருக்க முடியும்? இப்படிப்பட்ட பக்திப்பரவசமும் அர்ப்பணிப்பும் கொண்ட எல்லா ஆத்மாக்களுக்கும் பிரார்த்தனை அவசியமற்றதே. ஆனால் அந்த நிலையை அடையும் வரை, சாந்தியான மனப்பாங்குடன் கூடிய பிரார்த்தனை ஆன்மிக சாதகர்களுக்கு அத்தியாவசியமே. இத்தகைய மனப்பாங்குடன் கூடிய பிரார்த்தனை, இன்பத்தை அனுபவிக்கும்போது சமநிலையில் (சம-ரஸா) இருப்பதை ஊக்குவிக்கும். (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-7)
இந்த பிரபஞ்சத்தில், பிரார்த்தனை மட்டுமே வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், இசைவானதாகவும், வாழ உகந்ததாகவும் ஆக்குகிறது. - பாபா