azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
You must welcome obstacles, for, they alone can toughen your character and make your faith firmer. When you hang a picture on the nail driven into the wall, you shake the nail and find out whether it is firm enough, to bear the weight of the picture, don't you? So too, in order to prevent the picture of God from falling and getting broken into bits, the nail (Name of God) driven into the wall of the heart has to be shaken by means of a disaster or two! Suppose I ask one of you now to jump from the first floor, you should not hesitate and weigh the pros and cons, and slide away, for fear of injuring your feet! It is a method of shaking the nail to ascertain whether it is firm and steady. You must take it as a Leela (Divine sport) of Mine and jump; if you do so, no injury will happen! Or else, I would not ask you to do it!( Divine Discourse Feb 21,1971)
TESTS ARE INTENDED NOT AS PUNISHMENT, BUT THEY ARE GIVEN
FOR ASCERTAINING ONE’S FITNESS FOR PROMOTION. - BABA
நீங்கள் தடைகளை வரவேற்க வேண்டும், ஏனெனில் அவை மட்டுமே உங்களுடைய குணநலனை வலுப்படுத்தி, இறைநம்பிக்கையை உறுதியாக்க முடியும். நீங்கள் சுவற்றில் ஒரு படத்தை மாட்ட ஒரு ஆணியை அடித்த பிறகு, அந்தப் படத்தின் பளுவைத் தாங்கும் அளவிற்கு உறுதியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஆணியை ஆட்டிப் பார்க்கிறீர்கள் அல்லவா? அதைப் போலவே, இறைவனுடைய படம் விழுந்து சுக்குநூறாக உடைந்து விடுவதைத் தடுப்பதற்கு, இதயத்தில் அடிக்கப்பட்ட ஆணியை (இறைவனது திருநாமம்) ஒன்றிரண்டு பேரிடர்களால் ஆட்டிப் பார்த்தாக வேண்டும்! ஒரு வேளை நான் உங்களில் ஒருவரை முதல் மாடியிலிருந்து குதியுங்கள் என்று சொன்னால், நீங்கள் தயங்கி, பின்விளைவுகளை சீர்தூக்கிப் பார்த்து, உங்கள் கால்களில் காயம் ஏற்படும் என்ற பயத்தில் நழுவி விடக்கூடாது! அது உறுதியாகவும் நிலையாகவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த ஆணியை ஆட்டிப் பார்ப்பது போன்ற ஒரு முறையாகும். அது என்னுடைய ஒரு லீலை என்று எடுத்துக் கொண்டு நீங்கள் குதிக்க வேண்டும்; அப்படிச் செய்தீர்களானால், ஒரு காயமும் ஏற்படாது! இல்லை என்றால் நான் உங்களை அவ்வாறு செய்யுமாறு கூறி இருக்க மாட்டேன்! (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 21, 1971)
சோதனைகள் அளிக்கப்படும் நோக்கம் தண்டிப்பதற்கு அல்ல, ஆனால் முன்னேற்றத்திற்கான ஒருவரது தகுதியைத் தெரிந்து கொள்வதற்காக அவை அளிக்கப்படுகின்றன. - பாபா