azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
A plantain tree has a number of uses: the leaf is used to eat one's meal from, the flower is used to prepare a few dishes, and the outer covers of the trunk can be used for binding and packing things as a good string-yielding substance, but, the main use of the tree is in the bunch of bananas! You take all the trouble of planting and growing the tree for the sake of the bananas, not the leaves, the strings, the inner soft core, or the flower. So too, the main use of this human body is the realisation of Reality! The rest is all incidental. The hands may be used for a variety of operations, but the chief purpose for which man has been endowed with them is to pray, to perform worship, and to hold the Feet of the Lord. The ears are designed to hear the glory of God, and the eyes to stand witness to His manifestations! The tongue may be used to talk scandal or to flatter those in authority, but that is really misuse! Use it as God willed it to be used - for singing hymns of Divine Glory.(Divine Discourse, Feb 21,1971)
KNOW THAT THE PURPOSE OF HUMAN BIRTH IS TO REACH THE LORD THROUGH WORSHIP. - BABA
ஒரு வாழைமரம் பலவிதங்களில் பயனளிக்கிறது: உணவை வைத்து உண்ண - வாழை இலை, சில பதார்த்தங்களைச் சமைக்க - அதன் பூ, கட்டுவதற்கு - அதிக நார் உள்ள பொருளாக இருக்கும் அதன் பட்டை, என உதவுகின்றன; ஆனால் அந்த மரத்தின் முக்கியமான பயன் அதன் வாழைத்தார் தான்! நீங்கள் அந்த மரத்தை நட்டு வளர்க்க பாடுபடுவதெல்லாம் அதன் வாழைப்பழங்களுக்காகவே அன்றி, அதன் இலை, கயிறு, தண்டு அல்லது பூக்களுக்காக அல்ல. அதைப் போலவே, இந்த மனித உடலின் பிரதான பயன் தெய்வீகத்தை உணர்வது தான்; மற்றவை அனைத்தும் தற்செயலானவையே. கைகளை பலவிதமான பணிகளுக்குப் பயன்படுத்தினாலும், அவற்றை மனிதனுக்கு அளித்திருப்பதன் பிரதான நோக்கம் - பிரார்த்திப்பதற்கும், இறைவனை வழிபடுவதற்கும், அவன் திருப்பாதங்களை இறுகப் பற்றிக்கொள்வதற்கும் தான். காதுகள் அவனது மகிமையைக் கேட்பதற்காகவும், கண்கள் அவனது திருவுருங்களைக் காண்பதற்காகவுமே வடிவமைக்கப்பட்டுள்ளன! நாக்கு பெரும்பாலும் வம்பு பேசுவதற்கோ அல்லது பதவியில் இருப்பவரை முகஸ்துதி செய்வதற்கோ தான் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது. அதை இறைவன் ஸங்கல்பித்தபடி, இறைவனது பெருமையைத் துதித்துப் பாடுவதற்கு பயன்படுத்துங்கள். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 21, 1971)
வழிபாட்டின் மூலம் தெய்வத்தை அடைவதே மனிதப் பிறவியின் நோக்கம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். -பாபா