azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Never give up the Gayatri Mantra; you may give up or ignore any other mantra but you should recite the Gayatri at least a few times a day. It will protect you from harm wherever you are travelling, working or at home. Westerners have investigated the vibrations produced by this mantra and have found that when it is recited with the correct accent as laid down in the Vedas, the atmosphere around becomes visibly illumined. So Brahmaprakasha, the effulgence of the Divine, will descend on you and illumine your intellect, and light your path when this mantra is chanted. Gayatri is Annapoorna, the Mother, the sustaining force that animates all life. So do not neglect it. Elders and priests, the custodians of this mantra, have given it the go-by. But you, as inheritors and guardians of this great culture, have a great responsibility in preserving it and demonstrating its efficacy and worth! (Divine Discourse, Jun 20, 1977.)
CHANTING OF THE GAYATRI MANTRA PURIFIES THE MIND AND
CONFERS DEVOTION, DETACHMENT AND WISDOM. - BABA
காயத்ரி மந்திரத்தை ஒருபோதும் விட்டு விடாதீர்கள்; நீங்கள் எந்த மந்திரத்தையாவது விட்டுவிட அல்லது உதாசீனப்படுத்தக் கூடும், ஆனால் நீங்கள் காயத்ரி மந்திரத்தை குறைந்தபட்சம் ஒருநாளில் சில தடவையாவது உச்சரிக்க வேண்டும். நீங்கள் எங்கு பயணம் செய்துகொண்டு இருந்தாலும், வேலை செய்துகொண்டு இருந்தாலும் அல்லது வீட்டில் இருந்தாலும், அது உங்களை தீங்கிலிருந்து பாதுகாக்கும். மேற்கத்தியர்கள் இந்த மந்திரத்தால் உண்டான அதிர்வுகளை ஆராய்ந்து, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சரியான உச்சரிப்புடன் இதை ஓதும்போது, சுற்றியுள்ள வளிமண்டலம் வெளிப்படையாக ஒளிரும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது, பிரம்மபிரகாசம், அதாவது தெய்வீகத்தின் பிரகாசம், உங்கள் மீது இறங்கி உங்கள் புத்தியைத் தெளிவாக்கி, உங்களுடைய பாதையை ஒளிரச் செய்யும். அனைத்து உயிர்களையும் இயக்கித் தாங்கும் சக்தியான அன்னபூரணி மாதாவே காயத்ரி. எனவே அதை உதாசீனப்படுத்தாதீர்கள். இந்த மந்திரத்தின் பாதுகாவலர்களான பெரியவர்களும், பூஜை செய்பவர்களும் இதைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனால், இந்தத் தலைசிறந்த கலாச்சாரத்தின் வாரிசுகளும் பாதுகாவலர்களுமான உங்களுக்கு, அதைப் பாதுகாப்பதிலும், அதன் செயல்திறனையும் மதிப்பையும் நிரூபிப்பதிலும், மாபெரும் பொறுப்பு உள்ளது! (தெய்வீக அருளுரை, ஜூன் 20, 1977)
காயத்ரி மந்திர ஜபம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது மற்றும் பக்தி, பற்றின்மை, ஞானம் ஆகியவற்றை அளிக்கிறது. - பாபா