azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The word Bali has a meaning, which is, charge for service rendered, or tax. We pay money to the department which supplies water, knowing fully well that it is not responsible for the creation of water. But what charges are we paying to the Creator of water? Nothing. Yet we wish to get His Grace. How is it possible to get His Grace without giving tax (bali or sunkam)? The tax which the Lord expects is devotion and purity of heart. This is the essence of the message of Onam. Onam is not to be treated as a festival which comes once a year, but as an event, the message of which should become a way of life for everyone. The three events which Onam symbolises should always be kept clear in one's mind: (i) The Incarnation of Lord Vishnu as the Vatu (ii) The attainment of liberation by Emperor Bali, and (iii) Bali’s mergence (Anthardhanam) with the Lord! (Divine Discourse, Sep 4, 1979.)
THE SIGNIFICANCE OF ONAM IS THAT THE LORD IS WON BY TOTALLY SURRENDERING ONE’S EGO. - BABA.
‘பலி’ என்ற வார்த்தைக்கு, செய்த சேவைக்கான கட்டணம் அல்லது வரி என்பது ஒரு பொருளாகும். நீரை உருவாக்கியதற்கு அந்தத் துறை பொறுப்பு அல்ல என்பதை முழுமையாக நன்கு அறிந்தும் கூட, நமக்கு நீரை வழங்கும் துறைக்கு நாம் பணம் செலுத்துகிறோம். ஆனால், நீரைப் படைத்த இறைவனுக்கு நாம் என்ன கட்டணம் செலுத்துகிறோம்? எதுவும் இல்லை. இருந்தாலும் நாம் அவனது அருளைப் பெற ஆசைப்படுகிறோம். வரி (பலி அல்லது சுங்கம்) செலுத்தாமல் அவனுடைய அருளை எவ்வாறு பெற முடியும்? இறைவன் எதிர்பார்க்கும் வரி - பக்தியும், இதயத்தூய்மையுமே. ஓணம் பண்டிகை அளிக்கும் செய்தியின் சாரம் இதுவே. வருடத்திற்கு ஒருமுறை வரும் ஒரு பண்டிகையாக ஓணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது; ஆனால், அது அளிக்கும் செய்தி அனைவருக்கும் ஒரு வாழ்க்கைமுறையாகவே ஆகவேண்டும் என்பதற்கான ஒரு நிகழ்வாக அதைக் கருத வேண்டும். 1) பகவான் விஷ்ணு வடுவாக அவதாரம் எடுத்தது 2) பலிச்சக்ரவர்த்தி முக்தி அடைந்தது 3) பலி இறைவனுடன் இரண்டறக் கலந்தது - ஓணம் பண்டிகை குறிக்கும் இந்த மூன்று நிகழ்வுகளையே ஒருவர் மனதில் தெளிவாக எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டியவையாகும். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 4, 1979)
அகந்தையை பரிபூரணமாக சமர்ப்பிப்பதன் மூலம் இறைவனை அடைய முடியும் என்பதே ஓணம் பண்டிகையின் முக்கியத்துவமாகும். – பாபா