azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 16 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 16 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Elation at profit, joy, and cheer; dejection at loss and misery — these are natural characteristics common to all mortals. What then is the excellence of aspirants? They should not forget the principle: Be vigilant and suffer the inevitable gladly. When difficulties and losses overwhelm you, do not lose heart and precipitate some action, but meditate calmly on how they came to be. Try to discover some simple means of overcoming or avoiding them, in an atmosphere of peace. When the blow is directed to the head, see that the turban alone gets it — this is the mark of keen intelligence. Peace is essential for this sharpness of intellect. Haste and worry confuse the intelligence. Peace develops all the beneficial characteristics. Even farsightedness grows through peace, and through that, obstacles and dangers can be anticipated and averted! (Prashanthi Vahini, Ch.6)
PEACE EMBELLISHES EVERY ACT; IT SOFTENS THE HARDEST CORE OF HUMANITY; IT TAKES YOU TO THE FOOTSTOOL OF THE LORD AND WINS FOR YOU THE VISION OF GOD. - BABA.
லாபம், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தில் குதூகலிப்பது; இழப்பு மற்றும் துன்பத்தில் சோர்வடைவது - இவை அனைத்து மனிதர்களுக்கும் இயற்கையான பண்புகள். எனில், ஆன்மிக சாதகர்களின் சிறப்புத்தன்மை என்ன? விழிப்புடன் இருத்தல், தவிர்க்க முடியாதவற்றை சந்தோஷமாக சகித்துக்கொள்ளுதல் எனும் கோட்பாட்டை அவர்கள் மறந்துவிடக் கூடாது. துன்பங்களும், இழப்புகளும் உங்களை ஆட்கொள்ளும்போது, மனம் தளர்ந்து, அவசரப்பட்டு எந்தச் செயலிலும் ஈடுபடாமல், அவை எவ்வாறு நேர்ந்தன என அமைதியாக சிந்தியுங்கள். ஒரு அமைதியான சூழ்நிலையில், அவற்றை வெல்ல அல்லது தவிர்க்க சில எளிய வழிகளைக் கண்டறிய முயற்சியுங்கள். தலைக்கு வரும் ஆபத்தை தலைப்பாகையோடு போகுமாறு செய்வது - அதுவே கூர்மையான புத்தியின் அறிகுறியாகும். இந்த புத்திகூர்மைக்கு சாந்தி அத்தியாவசியம். பதட்டமும், கவலையும் புத்தியைக் குழப்பி விடுகின்றன. சாந்தி அனைத்து பயனளிக்கும் குணங்களையும் வளர்க்கிறது. தொலைநோக்குப் பார்வையும் கூட சாந்தியின் மூலம் வளர்கிறது; அதனைக் கொண்டு தடைகளையும், அபாயங்களையும் முன்கூட்டியே அறிந்து, தவிர்த்து விட முடியும்! (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-6)
சாந்தி ஒவ்வொரு செயலுக்கும் மெருகூட்டுகிறது; அது மனிதகுலத்தின் மிகக் கடினமான உட்கருவை மிருதுவாக்குகிறது; அது உங்களை இறைவனது பாதாரவிந்தங்களுக்கு இட்டுச் சென்று, உங்களுக்கு இறைவனுடைய தரிசனத்தைப் பெற்றுத் தருகிறது. - பாபா