azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 12 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 12 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Grief or joy is the image of the activity one engages in. It is the resound, reflection, and reaction! The individual soul can be the witness without concerning itself with the good and bad of the activity. When involvement happens, good has to be experienced when good is done; evil, when evil is done. Vedanta asserts that the individual soul is, by its very nature, pure and unblemished. This is the accepted doctrine, according to Bharatiya thought. But this truth has been befogged by ignorance and neglect, so illusion (maya) pollutes the experience and the shade of ignorance breeds evil. But when beneficial activity is engaged in, clouds of illusion are scattered and the reality of the Self is realised. All beings, all souls, are pure by their very nature. Good acts remove the taints of evil deeds and preserve this essential purity. Then, the soul is led into the Godward path. The Godward urge will transform the thoughts, words, and deeds of the individual!( Sathya Sai Vahini, Ch.8)
IT IS ATTACHMENT TO THE BODY THAT PRODUCES THE ILLUSION OF INDIVIDUAL DOERSHIP. WHEN THAT ATTACHMENT GOES, THERE IS REALISATION OF ONENESS WITH THE DIVINE. - BABA
துன்பம் அல்லது இன்பம் என்பது ஒருவர் ஈடுபட்டிருக்கும் செயலின் பிம்பமே. அதுவே ப்ரதித்வனி, பிரதிபலிப்பு மற்றும் ப்ரதிவினை! செயலின் நல்லவை மற்றும் கெட்டவையைப் பற்றித் தான் ஈடுபாடு கொள்ளாமல் ஜீவாத்மா ஒரு சாட்சியாக இருக்க முடியும். ஈடுபாடு ஏற்பட்டவுடன், நல்லவை நடக்கும்போது நல்லவற்றையும், தீயவை நடக்கும்போது தீயவற்றையும் அனுபவித்தே ஆக வேண்டும். ஜீவாத்மா இயற்கையிலேயே பரிசுத்தமானது, அப்பழுக்கற்றது என்று வேதாந்தம் உறுதி பட உரைக்கின்றது. பாரதீய (பாரத தேச) சிந்தனைப்படி இது ஏற்றுக் கொள்ளப்பட்ட சித்தாந்தமாகும். ஆனால் இந்த உண்மை, அறியாமை மற்றும் கவனக்குறைவால் மறைக்கப்படுகிறது; எனவே மாயையால் அனுபவம் மாசுபடுத்தப்பட்டு, அறியாமையின் நிழலால் தீமை உருவாக்கப்படுகிறது. ஆனால் நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடும் போது, மாயையின் மேகங்கள் கலைக்கப்பட்டு, ஆத்மாவின் உண்மை நிலை உணரப்படுகிறது. அனைத்து உயிரினங்களும், அனைத்து ஆத்மாக்களும் அவற்றின் இயல்புப்படி பரிசுத்தமானவையே. நற்செயல்கள் தீய செயல்களின் மாசை நீக்கி, அத்தியாவசியமான இந்த பரிசுத்தத்தைப் பராமரிக்கின்றன. பின்னர் ஆத்மா இறைவனது பாதைக்கு இட்டுச் செல்லப்படுகிறது. இறைவனை நோக்கிய உந்துதல், தனி மனிதனின் சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களை நல்மாற்றம் செய்துவிடும்! (சத்ய சாய் வாஹினி, அத்தியாயம்-8)
உடல் பற்றுதான், மனிதனுக்கு அனைத்தையும் தானே செய்கிறோம் எனும் மாயையை உருவாக்குகிறது. அந்தப் பற்றுதல் நீங்கிவிடும் போது தெய்வீகத்துடன் ஒன்றிய மெய்யுணர்வு ஏற்படுகிறது. - பாபா