azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

You must win the grace of God. When a person secures it, the individual soul will be released from identification with the body and can identify itself with the Atma. This consummation is referred to in the Vedas as “liberation from bonds” (bandha-vicchedana), or “release” (moksha). To battle against the tendency of body identification and win the grace of God as the only means of victory, spiritual exercises have been laid down, such as philosophical inquiry, as well as sense control (dama) and other disciplines of the six-fold spiritual discipline. Their practice will ensure the purification of the consciousness; it will then become like a clean mirror that can reflect the object, and the Atma will stand revealed clearly. For the attainment of the highest wisdom (jnana-siddhi), the cleansing of the consciousness (chitta-suddhi) is the royal path. For the pure in heart, this is easy to achieve.(Sathya Sai Vahini, Ch.1)
THE MOMENT YOU ATTAIN PURITY OF THE HEART,
THE OMNIPRESENT GOD WILL MANIFEST RIGHT IN FRONT OF YOU. – BABA
நீங்கள் இறைவனது அருளை பெற்றே ஆக வேண்டும். ஒருவருக்கு அது கிட்டியவுடன், ஜீவாத்மா, உடலுடன் தன்னை இனம் கண்டு கொள்வதிலிருந்து விடுபட்டு, தன்னைத் தானே ஆத்மாவுடன் இனம் கண்டு கொள்ள முடியும். இவ்வாறு முழுமை அடைவதைத் தான், "பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவது (பந்த-விச்சேதனா)" அல்லது "விடுதலை" (மோக்ஷம்) என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஆன்மிக சாதனைகளான தத்துவ விசாரணை, புலனடக்கம் (தமா) மற்றும் ஆறுவிதமான பிற ஆன்மிக சாதனைகள் ஆகியவை, உடல் பற்றுதல் மனப்பாங்குடன் போராடி, இறையருளைப் பெறுவதில் வெற்றியை அடைவதற்கான ஒரே வழியாக வகுத்தளிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பது உணர்வுநிலையைத் தூய்மைப்படுத்துவதை உறுதி செய்யும்; அதன் பிறகு அது, பொருளைப் பிரதிபலிக்கவல்ல சுத்தமான ஒரு கண்ணாடி போல ஆகி விடுவதால், ஆத்மா தெளிவாக வெளிப்படும். உணர்வுநிலையைப் பரிசுத்தமாக்குவதே (சித்த-சுத்தி), மிக உயர்ந்த ஞானத்தை அடைவதற்கான (ஞான-சித்தி) ராஜபாட்டையாகும். தூய்மையான இதயம் கொண்டவர்களுக்கு, இதை அடைவது எளிதானதே. (சத்ய சாய் வாஹினி, அத்தியாயம்-1)
நீங்கள் இதயத் தூய்மையை அடைந்தவுடனேயே, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் உங்கள் முன் ப்ரத்யக்ஷம் ஆகி விடுவான். – பாபா