azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 30 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 30 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Ignorance (maya) is like the ghost of a tribal woman, which once possessed a great pandit in a Himalayan hermitage. The unfortunate pandit sang and danced like any tribal damsel; he swore and cursed in the Paisachi (ghost) dialect, and everyone in the hermitage became ashamed of his company. At last, when the ghost was exorcised and the pandit was freed, he became his original self. He remembered nothing of his pranks and blabberings. Humanity is similarly possessed by the ghost of ignorance (maya). The ghost has to be driven out. The mode of exorcism of this ghost is taught by the Guru or the Gita. Do not despair; it can be driven out. Confidence adds the required courage and strength. Do not doubt or give vent to despair. It must happen whether you welcome it or not, whether you strive for it or not — that is your reason for taking birth, the goal you have to reach. You have not come to be a tool in the hands of a ghost. ( DIVINE Discourse, July 17,1962)
JUST AS A LAMP IS NEEDED TO DRIVE AWAY DARKNESS,
JNANA OR WISDOM IS THE ONLY ANTIDOTE FOR IGNORANCE. - BABA
ஒரு முறை, இமயமலையின் ஆசிரமத்தில் இருந்த ஒரு தலைசிறந்த பண்டிதரைப் பிடித்துக் கொண்ட ஒரு பழங்குடிப் பெண் பேயைப் போன்றதே அறியாமை (மாயை) என்பது. பரிதாபமான அந்தப் பண்டிதர் ஒரு பழங்குடிப் பெண்ணைப் போல பாடவும், ஆடவும் செய்தார்; அவர் பைசாசி (பேய்) பாஷையில் திட்டவும், சபிக்கவும் செய்தார்; ஆசிரமத்தில் இருந்த அனைவருக்கும் அவரால் தலைகுனிவு ஏற்பட்டது. இறுதியில், அந்தப் பேய் விரட்டப்பட்டு, பண்டிதர் குணம் அடைந்த பின், அவர் சுயநிலைக்கு வந்து விட்டார். அவருக்கு தான் அடித்த கூத்துக்களையும், உளறல்களையும் பற்றிய நினைவே இல்லை. மனித குலத்தையும் அதைப் போலவே அறியாமை (மாயை) எனும் பேய் பிடித்து ஆட்டுகிறது. அந்தப் பேயை விரட்டியே ஆக வேண்டும். இந்தப் பேயை விரட்டும் முறை, குரு அல்லது பகவத்கீதையால் கற்றுத்தரப்படுகிறது. மனம் தளர வேண்டாம்; அதை விரட்டி விட முடியும். நம்பிக்கை, தேவையான தைரியத்தையும், வலிமையையும் தந்து விடும். சந்தேகப்படவோ அல்லது மனம் தளரவோ செய்யாதீர்கள். நீங்கள் அதை வரவேற்கிறீர்களோ இல்லையோ, அதற்காகப் பாடுபடுகிறீர்களோ இல்லையோ, அது நடந்தே தீரும் - நீங்கள் பிறவி எடுத்த காரணமும், நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோளும் அதுவே. ஒரு பேயின் கைப்பாவையாக இருப்பதற்காக நீங்கள் இங்கே வரவில்லை. (தெய்வீக அருளுரை, ஜூலை 17, 1962)
எவ்வாறு இருளை விரட்டி அடிக்க ஒரு தீபம் தேவையோ, அவ்வாறே, அறியாமைக்கான ஒரே மாற்று மருந்து ஞானமே. – பாபா