azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 29 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 29 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
![Beloved Bhagawan Sri Sathya Sai Baba](/baba/2021/07-2021/htmls/photos/TFD 29.07.2021/baba1.jpg)
All are actors in the drama designed by Him — dolls dancing and acting as He pulls the strings. The role you have might be that of an officer, a soldier, farmer, beggar or a clerk. Act well your part so that the drama might be a success. Do everything in a spirit of dedication, as if in each moment you act, speak, and even feel in response to a command received. To get that mood of dedication, the Bhakti Sutras (aphorisms on devotion) prescribe nine paths, but the easiest and the most practicable is a life lived in the constant remembrance of the Lord. A bar of iron sinks in water but beat it into a hollow vessel and it will float merrily and even carry some weight. So too, man’s mind sinks easily in the sea of senses; beat it hollow, hammering it with the Name of the Lord. It will float safely on a sea of troubles. ( Divine Discourse July 27,1961)
THE LORD ALONE IS AWARE OF THE PLAN, FOR HIS IS THE PLAN! WHEN THE ENTIRE STORY IS UNFOLDED, YOU WILL APPRECIATE HIS PLAN, NOT UNTIL THEN. – BABA
அனைவரும் இறைவன் வடிவமைத்துள்ள நாடகத்தின் நடிகர்களே - அவன் இழுக்கும் கயிருக்கு ஏற்றவாறு ஆடும் நடிக்கும் பொம்மைகளே. உங்களுடைய பாத்திரம், ஒரு அதிகாரியாக, ராணுவ வீரனாக, விவசாயியாக, பிச்சைக்காரனாக அல்லது குமாஸ்தாவாக இருக்கலாம். நாடகம் வெற்றி பெற, உங்களுடைய பாத்திரத்தில் நன்றாக நடியுங்கள். ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் செய்வதையோ, சொல்வதையோ மேலும் உணர்வதையோ கூட, உங்களுக்கு (இறைவனிடமிருந்து) கிடைத்த கட்டளைக்கு ஏற்றவாறு செய்கிறீர்கள் என்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒவ்வொன்றையும் செய்யுங்கள். அந்த அர்ப்பணிப்பு உணர்வைப் பெறுவதற்கு, பக்தி ஸூத்திரங்கள் ஒன்பது விதமான பாதைகளை அறிவறுத்துகின்றன; ஆனால், இடையறாது இறைவனை நினைவில் கொண்டு வாழும் ஒரு வாழ்க்கையே, அவற்றில் மிகவும் எளிதானதும், நடைமுறைக்கு மிகவும் ஏற்றதும் ஆகும். ஒரு இரும்புத் துண்டு நீரில் மூழ்கி விடும்; ஆனால் அதைத் தட்டி வெற்றுப் பாத்திரமாக ஆக்கினால், அது நன்றாக மிதக்கவும், சிறிது எடையைச் சுமந்து செல்லவும் கூடச் செய்யும். அதைப் போலவே, மனிதனின் மனமும் புலன்கள் எனும் கடலில் மூழ்கி விடுகிறது; ஆனால் அதை இறைவனது திருநாமம் எனும் சுத்தியலால் அடித்து வெற்றுப் பாத்திரமாக ஆக்கினால், அது துன்பங்கள் எனும் ஒரு கடலில் பத்திரமாக மிதந்து செல்லும். (தெய்வீக அருளுரை, ஜூலை 27, 1961)
இறைவன் மட்டுமே அவனது திட்டத்தை அறிவான், ஏனெனில் அது அவனுடைய திட்டம்! எப்போது முழுக்கதையும் தெரிகிறதோ அப்போதுதான் நீங்கள் அவனது திட்டத்தைப் பாராட்டுவீர்களே அன்றி, அதுவரை அல்ல. – பாபா