azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 27 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 27 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
It was just said, all of you are all like boulders, rough and hard, and devotion has the power to make you soft and smooth. Now, what does a sculptor do when he sees a good boulder? He pictures in his mind the lovely idol of God that is sleeping inside it. He becomes possessed with the idea of liberating the idol from the hard clasp of the stone. He takes up his chisel and removes the extra stone that lies around the beautiful figure, and, at last, he liberates the image. The boulder has to suffer all that hard chiselling in order to become the image of God. So too, you should cast off all the impediments, all the encumbrances that drag you down and make you a boulder instead of a devotee, an ascetic of the highest order (Paramahamsa), or even the Supreme Being (Paramatma).( Divine Discourse July 27,1961)
EVERYONE SHOULD STRIVE TO UNFOLD THE DIVINITY WITHIN THEM AND ILLUMINATE THEIR LIVES. – BABA
நீங்கள் அனைவரும் பாறைகளைப் போல கரடுமுரடாகவும், கடினமாகவும் இருக்கிறீர்கள்; உங்களை மிருதுவாகவும், மென்மையாகவும் ஆக்கும் சக்தி பக்திக்கு உள்ளது என்று இப்போது கூறப்பட்டது. ஒரு நல்ல பாறையைப் பார்க்கும் போது சிற்பி என்ன செய்கிறான்? அதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் அழகான இறைவனது ஒரு சிலையை அவனது மனதில் அவன் உருவகப்படுத்திக் கொள்கிறான். பாறையின் கடினமான பிடியிலிருந்து அந்தச் சிலையை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அவன் ஆட்கொள்ளப்படுகிறான். அவன் தனது உளியை எடுத்து, அந்த அழகான உருவத்தைச் சுற்றி இருக்கும் தேவையற்ற கல்லைச் செதுக்கி எடுத்துவிட்டு, இறுதியில் அந்தச் சிலையை விடுவிக்கிறான். இறைவனின் சிலையாக ஆவதற்கு, அந்தப் பாறை அனைத்து உளி அடிகளுக்கும் ஆளாக வேண்டி உள்ளது. அதைப் போலவே, ஒரு பக்தனாக, உயர்ந்த ஒரு துறவியாக (பரமஹம்ச) அல்லது இறைவனாகவே (பரமாத்மா) ஆவதற்கு பதிலாக, உங்களை கீழே தள்ளி ஒரு பாறையைப் போல ஆக்கிவிடும் அனைத்து தடைகள் மற்றும் பந்தங்களை நீங்கள் உதறித் தள்ள வேண்டும். (தெய்வீக அருளுரை, ஜூலை 27, 1961)
ஒவ்வொருவரும் அவர்களுக்குள் உறையும் தெய்வீகத்தை வெளிப்படுத்தி, தங்களது வாழ்வில் ஒளியூட்டப் பாடுபட வேண்டும். - பாபா