azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 21 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 21 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Man is a triune composite of body, mind, and spirit (Atma). As a consequence, man has three natures in his make-up: (1) a low, animal nature, (2) a human nature, replete with worldly knowledge and skill, and (3) the genuine nature of man, namely, divine, the Atmic nature. Becoming aware of this third nature and establishing oneself in it — this is spiritual education (vidya). The body is a machine with five elements as its components: space, air, fire, water, and earth. God is playing with it, Himself unseen. The body is a tree; love of Self is the root; desires are the branches it sends forth; qualities, attributes, and modes of behaviour based on basic nature are the flowers issuing therefrom; and joy and grief are the fruits it offers. The human body is a world in itself. The blood flows through and animates every part of the body. God flows in and through and activates every spot in the world!(Vidya Vahini .Ch.5)
LOOK UPON THE BODY AS A SHRINE IN WHICH THE DIVINE IS INSTALLED.
DEDICATE ALL ACTIONS TO GOD. -BABA
மனிதன், உடல், மனம் மற்றும் ஆத்மா ஆகியவற்றின் முக்கலவை ஆவான். இதன் விளைவாக அவனிடம் மூன்று விதமான இயல்புகள் உள்ளன: 1) கீழ்த்தரமான மிருக இயல்பு 2) உலகியலான அறிவும், திறமையும் நிரம்பிய மனித இயல்பு 3) மனிதனின் உண்மையான இயல்பான, தெய்வீக ஆத்ம இயல்பு. இந்த மூன்றாவது இயல்பை உணர்ந்து, அதில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே ஆன்மிகக் கல்வியாகும் (வித்யா). பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலத்தைக் கூறுகளாகக் கொண்ட ஒரு கருவியே உடல். கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் இறைவன் அதனுடன் விளையாடுகிறான். உடல் ஒரு மரம் போன்றது; ஆத்மா மீதான ப்ரேமையே அதன் வேர்; ஆசைகளே அதிலிருந்து வெளித்தோன்றும் கிளைகள்; ஆதார இயல்பை அடிப்படையாகக் கொண்ட குணங்கள், அம்சங்கள் மற்றும் நடத்தை முறைகள் ஆகியவையே அவற்றிலிருந்து தோன்றும் மலர்கள்; சுகமும், துக்கமுமே அது தரும் பழங்கள். மனித உடல் தனக்குள்ளேயே ஒரு உலகத்தைக் கொண்டதாகும். ரத்தம், உடலின் ஒவ்வொரு அங்கத்தினுள்ளும் ஓடி, அவற்றை இயக்குகிறது. அதைப் போலவே, இறைவனும் உலகின் ஒவ்வொரு இடத்தினுள்ளும் ஊடுருவி அவற்றை இயக்குகிறான்! (வித்யா வாஹினி, அத்தியாயம்-5)
உடலை இறைவன் உறையும் ஆலயமாகக் கருதுங்கள். அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணியுங்கள். - பாபா