azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Giving up desire is the real goal of existence, the purpose of all efforts. It involves giving up lust, anger, greed, and hatred. The fundamental renunciation should be that of desire. The other feelings and emotions are its attendant reactions. We say, “He who has a bow in his hand (kodandapani)”; doesn’t that imply he also has arrows in his hand? Here bow implies arrows! In the same manner, desire implies presence of lust, anger, greed, etc. These latter are veritable gateways to hell. Envy is the bolt, pride is the key. Unlock and lift the bolt, you can enter! Anger will pollute earned wisdom. Unbridled desire will foul all actions. Greed will destroy devotion and dedication. Anger, desire, and greed will undermine the actions, spiritual wisdom, and devotion and make one a boor! The root cause of anger is desire, and desire is the consequence of ignorance (ajnana). So, what has to be got rid of is this basic ignorance! (Vidya Vahini,Ch 4.)
ANGER WILL POLLUTE ALL WISDOM EARNED.
GREED WILL DESTROY DEVOTION AND DEDICATION. - BABA.
ஆசையை விட்டுவிடுவதே அனைத்து முயற்சிகளின் குறிக்கோளும், வாழ்க்கையின் உண்மையான இலட்சியமும் ஆகும். காமம், க்ரோதம், லோபம் மற்றும் துவேஷத்தை விட்டுவிடுவதும் இதில் அடங்கும். ஆசையை துறப்பதுதான் துறவின் அடிப்படையாக இருக்கவேண்டும். மற்ற உணர்வுகளும், உணர்ச்சிகளும், அதனுடன் வரும் எதிர்வினைகள் ஆகும். "கையில் வில்லை ஏந்தியிருப்பவர் - கோதண்டபாணி" என நாம் கூறும்போது, அவரது கையில் அம்புகளும் வைத்துள்ளார் என்றும் பொருள்படுகிறது அல்லவா? இங்கு வில் என்பது அம்புகளோடு கூடியது என்பதாகும்! அதைப் போலவே ஆசை என்றால், காமம், க்ரோதம், லோபம் போன்றவையும் இருக்கின்றன என்பது புலனாகிறது. இந்த குணங்கள் அனைத்தும் உண்மையில் நரகத்தின் நுழைவாயில்களே. பொறாமையே தாழ்ப்பாள், தற்பெருமையே சாவி. சாவியைப் போட்டுத் தாழ்ப்பாளைத் திறந்தால் நீங்கள் உள்ளே போகலாம். கோபம், ஈட்டிய ஞானத்தை மாசுபடுத்தி விடும். கட்டுக்கடங்காத ஆசை அனைத்து செயல்களையும் கெடுத்து விடும். பக்தி மற்றும் சிரத்தையை லோபம் அழித்து விடும். கோபம், ஆசை, மற்றும் லோபம் ஆகியவை, கர்மம், ஞானம் மற்றும் பக்தியைக் குலைத்து, ஒருவரை காட்டுமிராண்டியாக ஆக்கிவிடும்! கோபத்தின் அடிப்படைக் காரணம் ஆசை; ஆசை, அறியாமையின் (அஞ்ஞானம்) விளைவு. எனவே விட்டுவிட வேண்டியது, இந்த அடிப்படை அறியாமையையே! (வித்யா வாஹினி, அத்தியாயம்-4)
கோபம், ஈட்டிய அனைத்து ஞானத்தையும் மாசுபடுத்தி விடும்.
லோபம், பக்தி மற்றும் சிரத்தையை அழித்து விடும். – பாபா