azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Man does not use his sense organs in the right way. He has eyes, but does not see what is good. He has ears, but does not listen to what is good. There is only one way of correcting him. He has to be shown the spiritual path and helped to cultivate the virtues of Truth, Love and Self-sacrifice. He must be weaned away from selfish pursuits and from arrogance and pride. His mind, which is the real culprit, has to be cleansed of all evil. He believes in the false and unreal, and does not relish Truth, Goodness and Beauty. He can acquire real peace and joy only when he turns his thoughts to God and away from the petty tinsel of the world. Without faith in God there is nothing that man can achieve, whatever his knowledge and wealth may be!( Divine Discourse Ocober 12,1983)
THE CONTROL OF THE SENSES IS ITSELF A FORM OF TYAGA (SACRIFICE)
WHICH LEADS TO IMMORTALITY. - BABA
மனிதன் தன் புலனுறுப்புக்களை சரிவரப் பயன்படுத்துவதில்லை. அவனுக்குக் கண்கள் இருக்கின்றன, ஆனால் அவன் நல்லவற்றைப் பார்ப்பதில்லை. அவனுக்குக் காதுகள் இருக்கின்றன, ஆனால் அவன் நல்லவற்றைக் கேட்பதில்லை. அவனைத் திருத்துவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஆன்மிகப் பாதையை அவனுக்குக் காட்டி, நல்லொழுக்க நெறிகளான சத்யம், ப்ரேமை மற்றும் சுயதியாகம் ஆகியவற்றை அவன் வளர்த்துக்கொள்ள உதவ வேண்டும். சுயநல நோக்கங்கள், ஆணவம் மற்றும் தற்பெருமை ஆகியவற்றிலிருந்து அவனை விலகி இருக்கச் செய்ய வேண்டும். உண்மையான குற்றவாளியான அவன் மனம், தீயவை எதுவும் இன்றி தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அவன் போலியையும், பொய்மையையும் நம்புகிறானே அன்றி, சத்யம், சிவம் மற்றும் சுந்தரத்தை விரும்புவதில்லை. உலகின் அற்பமான பொருட்களிலிருந்து விலகி, இறைவனை நோக்கி அவன் தன் சிந்தனைகளைத் திருப்பினால் மட்டுமே உண்மையான சாந்தி, சந்தோஷங்களைப் பெற முடியும். மனிதன் எவ்வளவுதான் அறிவாற்றல் மற்றும் செல்வத்துடன் இருந்தாலும், இறை நம்பிக்கை இன்றி அவனால் எதையும் சாதிக்க முடியாது. (தெய்வீக அருளுரை, அக்டோபர் 12, 1983)
இறவாநிலைக்கு இட்டுச்செல்லும் புலனடக்கமும் தியாகத்தின் ஒரு வடிவம் தான். - பாபா