azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
From the 46 maxims of conduct: 46) If your meditation or prayer isn’t progressing properly or if desires you entertain don’t come to fruition, don’t get dispirited with God. If you do, it will discourage you even more and you’ll lose peace, however small or big, that you may have earned. During meditation and chanting, you should not be dispirited, desperate, or discouraged. When such feelings come, take it that it is the fault of your spiritual exercises, and endeavour to do them correctly. You can easily attain the divine principle only when you automatically behave and act in this manner in your daily conduct and in all actions. Therefore, hold on to these maxims firmly. Chew and digest these spoken sweets, which have been distributed and be happy! ( Sandeha Nivarini, Ch.7)
IF YOU LACK FAITH IN GOD, IT MEANS YOU LACK FAITH IN YOURSELF. IF YOU DON’T HAVE FAITH IN YOURSELF, THEN HOW CAN YOU HAVE FAITH IN GOD? -BABA.
46 நன்னெறிக் கோட்பாடுகளிலிருந்து: 46) உங்களுடைய தியானம் அல்லது பிரார்த்தனை சரிவர முன்னேறவில்லை என்றாலோ அல்லது நீங்கள் விரும்பும் ஆசைகள் நிறைவேறவில்லை என்றாலோ, இறைவனிடம் மனந்தளர்ந்து விடாதீர்கள். அப்படிச் செய்தால், நீங்கள் மேலும் நம்பிக்கையை இழந்து, நீங்கள் அடைந்து இருக்கின்ற அமைதியை, சிறியதோ-பெரியதோ, அதனையும் இழந்து விடுவீர்கள். தியானம் மற்றும் ஜபத்தின் போது நீங்கள் சோர்வாக, நம்பிக்கை இழந்து, ஊக்கமின்றி இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட உணர்வுகள் வரும்போது, அது உங்களுடைய ஆன்மிக சாதனைகளின் குறைபாடு என்று உணர்ந்து, அவற்றைச் சரியாகச் செய்யப் பாடுபடுங்கள். உங்களுடைய அன்றாட வாழ்க்கையில், அனைத்து செயற்பாடுகளில், நீங்களாகவே இவ்வாறு நடந்துகொள்ளும் பொழுது மட்டும் தான், நீங்கள் தெய்வீக தத்துவத்தை எளிதாக அடைய முடியும். எனவே, இந்த உயர்ந்த கோட்பாடுகளை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட இந்த இனிய உபதேசங்களை மென்று, கிரஹித்து, ஆனந்தமாக இருங்கள்! (ஸந்தேஹ நிவாரிணி, அத்தியாயம் 7)
உங்களுக்கு இறைவனிடம் நம்பிக்கை இல்லை என்றால், உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று பொருளாகும். உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், பின்னர் உங்களுக்கு இறைவனிடம் நம்பிக்கை எப்படி இருக்க முடியும்? - பாபா