azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 12 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 12 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
From the 46 maxims of conduct: 44) If you desire to cultivate one-pointedness, when in a crowd or bazaar, don’t scatter your vision on everything and to the four corners, but see only the road in front of you, just enough to avoid accidents to yourself! One-pointedness will become firmer if you move without taking your attention off the road, if you are constantly avoiding dangers, and if you don’t cast your eyes on others’ forms! 45) Give up all doubts regarding the guru and God. If your worldly desires don’t get fulfilled, don’t blame it on your devotion, for there is no relationship between such desires and devotion to God. These worldly desires have to be given up some day; feelings of devotion have to be acquired someday. Be firmly convinced of this! ( Sandeha Nivarini, Ch.7)
LOVE FOR GOD SHOULD BE FREE FROM ANY DESIRE FOR FAVOURS. - BABA
46 நன்னெறிக் கோட்பாடுகளிலிருந்து: 44) நீங்கள் ஒருமுக சிந்தனையை வளர்த்துக் கொள்ள விரும்பினால், ஒரு கூட்டத்திலோ அல்லது சந்தையிலோ இருக்கும்போது, உங்களுடைய கண்பார்வையை நாலாபக்கமும் எல்லாவற்றின் மீதும் அலைய விடாதீர்கள்; மாறாக உங்கள் முன் இருக்கும் சாலையை விபத்துக்கள் ஏற்படாத அளவிற்கு கவனமாக பார்த்துக் கொண்டால் போதுமானது. சாலையிலிருந்து கவனத்தை சிதறவிடாமல், ஆபத்துக்களை விலக்கியும், பிற உருவங்களின் மீது பார்வையை செலுத்தாமலும் முன்னேறிச் சென்றுகொண்டு இருந்தால் ஒருமுக சிந்தனை மேலும் உறுதி பெறும். 45) குரு மற்றும் கடவுளைப் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் விட்டு விடுங்கள். உங்களுடைய உலகியலான ஆசைகள் நிறைவேறவில்லை என்றால், அதற்காக உங்களுடைய பக்தியை குறை கூறாதீர்கள்; ஏனெனில், இப்படிப்பட்ட ஆசைகளுக்கும் இறைபக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த உலகியலான ஆசைகளை என்றாவது துறந்துதான் ஆக வேண்டும்; பக்தி உணர்வுகளை என்றாவது அடைந்துதான் ஆக வேண்டும். இதை உறுதியாக நம்புங்கள்! (ஸந்தேஹ நிவாரிணி, அத்தியாயம் 7)
இறைவனிடம் கொள்ளும் ப்ரேமை, பிரதிபலன்கள் மீதான
எவ்வித ஆசையும் இன்றி இருக்க வேண்டும். - பாபா