azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 09 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 09 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

From the 46 maxims of conduct: 32) Whatever you feel should not be done to you by others, avoid doing such to others. 33) For faults and sins committed in ignorance, repent sincerely and try not to repeat them. Pray to God to bless you with the strength and courage needed to stick to the right path. 34) Don’t allow anything to come near you that will destroy your eagerness and enthusiasm for God. Want of eagerness will cause the decay of the strength of people. 35) Don’t yield to cowardice; don’t give up bliss (ananda). 36) Don’t get swelled up when people praise you; don’t feel dejected when people blame you. 37) If anyone among your friends hates another and starts a quarrel, don’t attempt to inflame them more and make them hate each other more; instead, try with love and sympathy, to restore their former friendship.( Sandeha Nivarini, Ch.7)
REPENT FOR ALL WRONGS DONE AND RESOLVE NOT TO REPEAT THE MISTAKE;
THEN GOD WILL EXTEND HIS GRACE. - BABA.
46 நன்னெறிக் கோட்பாடுகளிலிருந்து: 32) எதையெல்லாம் மற்றவர்கள் உங்களுக்குச் செய்யக்கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அவற்றை பிறருக்குச் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். 33) அறியாமையினால் செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் உளமாற வருந்தி, அவற்றை மீண்டும் செய்யாமலிருக்க முயலுங்கள். சரியான பாதையைப் பற்றி ஒழுகுவதற்குத் தேவையான வலிமையையும், தைரியத்தையும் உங்களுக்கு அருளவேண்டும் என இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். 34) இறைவன் மீதான உங்களுடைய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் குலைக்கும் எதையும் உங்கள் அருகில் வருவதற்கு அனுமதிக்காதீர்கள். ஆர்வமின்மை மக்களின் வலிமையைச் சிதைத்து விடும். 35) கோழைத்தனத்திற்கு இடமளிக்காதீர்கள்; ஆனந்தத்தை கைவிடாதீர்கள். 36) மக்கள் உங்களைப் புகழும்போது பூரிக்கவும் வேண்டாம்; இகழும்போது சோர்ந்தும் போக வேண்டாம். 37) உங்களுடைய நண்பர்களுக்கிடையே யாராவது மற்றொருவரை வெறுத்து சண்டை போட ஆரம்பித்தால், அவர்கள் கொதித்தெழுந்து ஒருவரை ஒருவர் மேலும் வெறுக்குமாறு செய்யாதீர்கள்; மாறாக, ப்ரேமை மற்றும் பரிவுடன், முந்தைய நட்பை அவர்கள் மீண்டும் தொடர்வதற்கு முயற்சி செய்யுங்கள். (ஸந்தேஹ நிவாரிணி, அத்தியாயம் 7)
அனைத்து தவறுகளுக்காகவும் மனம் வருந்தி, மீண்டும் தவறு செய்வதில்லை என்று உறுதி பூணுங்கள்; பின்னர் இறைவன் தன் அருளைப் பொழிந்திடுவான். - பாபா