azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 08 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 08 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

From the 46 maxims of conduct: 26. Greed yields only sorrow; contentment is best. There is no happiness greater than contentment. 27. The mischief-mongering tendency should be plucked out by the roots and thrown off. If allowed to exist, it will undermine life itself. 28. Bear both loss and grief with fortitude; try to find plans to achieve joy and gain. 29. When you are invaded by anger, practice silence or remember the name of the Lord. Do not remind yourself of things that will inflame the anger more. That will do incalculable harm. 30. From this moment, avoid all bad habits. Do not delay or postpone. They do not contribute the slightest joy. 31. Try, as far as possible within your means, to satisfy the needs of the poor, who are really God as poverty. Share with them whatever food you have and make them happy at least at that moment. ( Sandeha Nivaarani, ch.7)
FOR THE CONTENTED MIND, LIFE IS AN ENDLESS FESTIVAL,
BUT THE MIND WORRIED BY DESIRE WILL HAVE NO REST. – BABA
46 நன்னெறிக் கோட்பாடுகளிலிருந்து: 26. பேராசை துக்கத்தையே அளிக்கிறது; திருப்தியே மிகவும் சிறந்ததாகும். திருப்தியை விட சிறந்த சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. 27. பிரச்சனைகளை உருவாக்கும் மனப்பாங்கினை வேரோடு பிடுங்கி வீசி எறிந்து விட வேண்டும்; அதை இருக்கவிட்டால், அது வாழ்க்கையையே நாசமாக்கிவிடும். 28. நஷ்டத்தையும், துக்கத்தையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளுங்கள்; சந்தோஷத்தையும் லாபத்தையும் பெறுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயலுங்கள். 29. நீங்கள் கோபத்தால் தாக்கப்படும்போது அமைதியைக் கடைப்பிடியுங்கள் அல்லது இறைவனது திருநாமத்தை நினைவு கூறுங்கள். கோபத்தை மேலும் கிளறக்கூடிய விஷயங்களை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளாதீர்கள். அது கணக்கிட முடியாத தீங்கினை விளைவிக்கும். 30. இந்தத் தருணத்திலிருந்தே, அனைத்து தீய பழக்கங்களையும் தவிர்த்து விடுங்கள். இதை தாமதிக்கவோ ஒத்திப்போடவோ செய்யாதீர்கள். அவை எள்ளளவு ஆனந்தத்தைக் கூட தருவதில்லை. 31. உங்களால் முடிந்த வரை, தரித்திர நாராயணர்களாக இருக்கும் ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயலுங்கள். உங்களிடம் எந்த உணவு இருந்தாலும் அதை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, குறைந்த பட்சம் அந்தத் தருணத்திலாவது அவர்களுக்கு மகிழ்ச்சி அளியுங்கள். (ஸந்தேஹ நிவாரிணி, அத்தியாயம் 7)
திருப்தியான மனதிற்கு, வாழ்க்கை ஒரு முடிவே இல்லாத கொண்டாட்டமாகும், ஆனால் ஆசையால் கவலைப்படும் மனதிற்கு நிம்மதியே இருக்காது. - பாபா