azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

From the 46 maxims of conduct: 21. It is easy to conquer anger through love, attachment through reasoning, falsehood through truth, bad through good, and greed through charity. 22. No reply should be given to the words of the wicked. For your own good, be at a great distance from them. Break off all relations with such people. 23. Seek the company of good men, even at the sacrifice of your honour and life. Pray to God to bless you with the discrimination needed to distinguish between the good men and the bad. You must also endeavour to discriminate, using the intellect given to you. 24. Those who conquer states and earn fame in the world are hailed as heroes, no doubt, but those who have conquered the senses are heroes who must be acclaimed as the conquerors of the Universal. 25. Whatever acts a good or bad person may do, the fruits thereof follow them and will never stop pursuing them. ( Sandeha Nivaarani, ch.7)
WE MUST CULTIVATE FRIENDSHIP WITH PEOPLE OF COMPASSION AND INTEGRITY
AND FOLLOW THEIR EXAMPLE TO REALISE THE VALUE OF HUMAN LIFE. – BABA
46 நன்னெறிக் கோட்பாடுகளிலிருந்து: 21. ப்ரேமையின் மூலம் கோபத்தையும், பகுத்து ஆய்வதின் மூலம் பற்றுதலையும், உண்மையின் மூலம் பொய்மையையும், நல்லவற்றின் மூலம் கெட்டவற்றையும், தானத்தின் மூலம் பேராசையையும் வெல்வது எளிதாகும். 22. தீயவர்களின் வார்த்தைகளுக்கு எந்த பதிலும் அளிக்கக்கூடாது. உங்களுடைய நலனைக் கருதி, அவர்களிடமிருந்து வெகு தொலைவில் இருங்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து அனைத்து உறவுகளையும் துண்டித்து விடுங்கள். 23. உங்களுடைய கெளரவம் மற்றும் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டி இருந்தாலும் கூட, நல்ல மனிதர்களின் நட்பை நாடுங்கள். நல்ல மனிதர்கள் மற்றும் தீயவர்களை இனம் கண்டு கொள்வதற்கான பகுத்தறிவை அளிக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள புத்தியைப் பயன்படுத்தி, பகுத்தறிவதற்கும் கூட நீங்கள் முயற்சிக்க வேண்டும். 24. நாடுகளை வென்று, உலகில் புகழ் ஈட்டியவர்கள் ஹீரோக்களாக கொண்டாடப்படுகின்றனர், அதில் ஏதும் சந்தேகமில்லை; ஆனால் புலன்களை வென்றவர்களே ஹீரோக்கள் - அவர்களையே பிரபஞ்சத்தின் வெற்றிவீரர்களாக பாராட்டப்பட வேண்டும். 25. நல்லவரோ அல்லது கெட்டவரோ ஆற்றும் செயல்கள் எதுவாக இருப்பினும், அவற்றின் பலன்கள் அவர்களைப் பின்தொடரும் மற்றும் அவர்களை அவ்வாறு பின்தொடர்வதும் நிற்காது. (ஸந்தேஹ நிவாரிணி, அத்தியாயம் 7)
கருணையும்,நேர்மையும் கொண்ட மனிதர்களின் நட்பை நாம் வளர்த்துக் கொண்டு, அவர்களது உதாரணத்தைப் பின்பற்றி,மனித வாழ்க்கையின் மதிப்பை உணர வேண்டும் - பாபா