azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 01 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 01 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
There is an inevitable pair of accessories in vanity bags of ladies and in the pockets of gentlemen: mirror and a comb. You dread that your charm is endangered when your hair is in slight disarray, or when your face reveals patches of powder; so, you try to correct the impression immediately! While you are so concerned about this fast-deteriorating personal charm, how much more concerned should you really be about the dust of envy and hate, and patches of conceit and malice, that desecrate your mind and hearts? Have a mirror and comb for this purpose too! Have the mirror of devotion (Bhakti), to judge whether they are clean, bright and smart. Have also the comb of Jnana or wisdom, the wisdom earned by discrimination that straightens problems, resolves knots, and smoothens tangles to control and channelise feelings and emotions that are scattered wildly in all directions. (Divine Discourse June 26,1969)
DEVOTION TO THE DIVINE WILL GIVE YOU BLISS, PROSPERITY AND PEACE. - BABA
பெண்களின் ஆடம்பர கைப்பைகளிலும், ஆண்களின் சட்டைப் பைகளிலும் தவிர்க்கமுடியாத இரண்டு பொருட்கள் இருக்கும்; முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் சீப்பு. உங்கள் தலைமுடி சிறிது கலைந்திருந்தாலோ அல்லது உங்களுடைய முகத்தில் பவுடர் திட்டு திட்டாகத் தெரிந்தாலோ, உங்களுடைய அழகுக்கு ஆபத்து என்று அஞ்சுகிறீர்கள்; உடனே உங்கள் தோற்றத்தை சரி செய்ய முயல்கிறீர்கள்! வேகமாக அழிந்துவரும் தனிப்பட்ட அழகைப் பற்றி இந்த அளவிற்கு கவலைப்படும் நீங்கள், உங்களுடைய மனம் மற்றும் இதயத்தை சீரழிக்கும் பொறாமை - வெறுப்பு என்னும் தூசு, கர்வம் – வன்மம் என்னும் திட்டுக்கள் ஆகியவைப் பற்றி உண்மையில் எவ்வளவு அதிகம் கவலைப்பட வேண்டும்? இதற்காகவும் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும், சீப்பையும் வைத்திருங்கள்! பக்தி எனும் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொள்ளுங்கள்; அதைக்கொண்டு அவை தூய்மையாக பளிச்சிடும்படியாக நன்றாக இருக்கின்றனவா என்று பாருங்கள். பகுத்தறிவின் மூலம் பெற்ற ஞானம் எனும் சீப்பையும் வைத்துக் கொள்ளுங்கள்; அதைக்கொண்டு, எல்லா திசைகளிலும் தாறுமாறாக ஓடும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தி, சீராக வைத்து, சச்சரவு முடிச்சுகளையும் அவிழ்த்து, சிக்கல்களையும் தீர்த்துக் கொள்ளுங்கள் (தெய்வீக அருளுரை, ஜூன் 26, 1969)
இறைவனிடம் கொள்ளும் பக்தி உங்களுக்கு ஆனந்தம், வளமை மற்றும் சாந்தியை அளிக்கும். – பாபா