azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 29 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 29 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Wear the invisible badge of a volunteer of God at all hours and in all places. Let all the days of living be a continuous offering of Love, as an oil lamp exhausts itself in illumining the surroundings. Bend the body, mend the senses, and end the mind - that is the process of attaining the status of 'the children of immortality’, which the Upanishads have reserved for man. God is the embodiment of sweetness. Attain Him by offering unto Him, who resides in all, the sweetness that He has showered on you. Crush the cane in the mill of seva, boil it in the cauldron of penitence, de-colorise it of all sensual itch, and offer the crystallised sugar of compassionate love to Him. Man is the noblest of all animals, the final product of untold ages of progressive evolution; but, he is not consciously striving to live up to his heritage!( Divine Discourse, June 26,1969)
PURE DEVOTION CALLS FOR UTILIZING THE MIND, SPEECH AND BODY TO WORSHIP THE LORD. – BABA
இறைவனின் சேவகன் என்ற கண்ணுக்குப் புலனாகாத அடையாளச் சின்னத்தை எப்பொழுதும், எங்கும் அணிந்திருங்கள். சுற்றுப்புறத்தை ஒளிரச் செய்வதற்காக தன்னையே முழுமையாகத் தந்துவிடும் ஒரு எண்ணெய் விளக்கைப் போல, வாழ்வின் அனைத்து நாட்களும் ப்ரேமையின் ஒரு தொடர்ந்த அர்ப்பணிப்பாக இருக்கட்டும். உடலால் உழைத்து, புலன்களைத் திருத்தி, மனதை அழியுங்கள் - இதுவே உபநிஷதங்கள் மனிதனுக்கு மட்டுமே அளித்துள்ள “அமரத்துவத்தின் புத்திரர்கள்” என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கான முறையாகும். இறைவன் இனிமையின் திருவுருவமாவான். அவன் உங்கள் மீது பொழிந்துள்ள இனிமையை, அனைத்திலும் உறையும் அவனுக்கே அர்ப்பணிப்பதன் மூலம் அவனை அடையுங்கள். சேவை எனும் ஆலையில் உடல் எனும் கரும்பைப் பிழிந்து, பச்சாதாபம் எனும் உலையில் காய்ச்சி, அதிலுள்ள எல்லா புலனின்ப அரிப்புகள் எனும் நிறத்தை நீக்கி, கருணைமயமான ப்ரேமை எனும் சர்க்கரைத் துகள்களை இறைவனுக்கு அர்ப்பணியுங்கள். எண்ணிலடங்காத யுகங்களில் ஏற்பட்ட படிப்படியான பரிணாம வளர்ச்சியின் இறுதித் தயாரிப்பான மனிதன் அனைத்து விலங்கினங்களைக் காட்டிலும் உன்னதமானவன்; ஆனால், தனது பாரம்பரியத்திற்கு ஏற்ப வாழ வேண்டுமென்று அவன் பாடுபடுவதில்லை! (தெய்வீக அருளுரை, ஜூன் 26, 1969)
மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகிய மூன்றையும் இறை ஆராதனைக்குப் பயன்படுத்துவதே பரிசுத்தமான பக்தியாகும். - பாபா