azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The idea behind bowing one's head at the feet of Bhagawan is that thereby sacred thoughts enter the devotee's mind. This means that when one comes in contact with the Lord's feet, sacred impulses from the feet flow to the devotee. When the devotee's head touches the Lord's feet, the Lord's divine energy flows towards him. This implies that you should keep contact with only pure objects and keep away from the impure! You are affected by whatever you touch. For instance, if you touch fire, it scalds. Fire can burn even iron. It is so potent. But when fire is extinguished, the residue is mere charcoal. When you touch charcoal, your hand becomes black. Thus, in either case, the contact is not beneficial! But, what happens when you come into contact with Divine Fire? All your bad thoughts and bad actions are reduced to ashes. This is the sanctity attached to the performance of Pada-namaskar (prostrating at the Feet of the Lord).(Divine Discourse,Mar 15, 1992)
PRACTICE THE ATTITUDE OF OFFERING EVERY ACT AT THE FEET OF GOD
AS A FLOWER IS OFFERED IN WORSHIP. - BABA
பகவானின் திருப்பாதங்களில் தலை வணங்குவதன் பின் உள்ள நோக்கம் புனிதமான சிந்தனைகள் பக்தனின் மனதில் நுழையும் என்பதாகும். ஒருவர் இறைவனின் திருப்பாதங்களைத் தொடும் போது, அவற்றிலிருந்து, புனிதமான தூண்டுதல்கள் பக்தரை நோக்கிப் பாய்கிறது என்பதே இதன் பொருள். பக்தனுடைய தலை இறைவனின் திருப்பாதங்களைத் தொடும் போது, இறைவனின் தெய்வீக சக்தி பக்தரை நோக்கிப் பாய்கிறது. நீங்கள் பரிசுத்தமான பொருட்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்; தூய்மையற்றவையிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து புலனாகிறது! நீங்கள் எதைத் தொட்டாலும், அதனால் பாதிக்கப்படுகிறீர்கள். உதாரணமாக, நீங்கள் நெருப்பைத் தொட்டால், அது சுட்டுவிடுகிறது. நெருப்பு, இரும்பைக் கூட எரிக்க வல்லது. அது அவ்வளவு சக்தி வாய்ந்தது. ஆனால், நெருப்பு அணைக்கப்பட்ட பின் மிஞ்சி இருப்பது வெறும் கரியே. நீங்கள் கரியைத் தொட்டால், உங்களுடைய கை கருப்பாகி விடுகிறது. இவ்வாறு, இரண்டு விதத்திலும் தொடுவது பயனற்றதே! ஆனால், நீங்கள் தெய்வீக நெருப்போடு தொடர்பு கொள்ளும் போது என்ன நிகழ்கிறது? உங்களுடைய அனைத்து தீய சிந்தனைகளும், தீய செயல்களும் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இதுவே பாதநமஸ்காரம் செய்வதன் புனிதத்துவமாகும் (தெய்வீக அருளுரை, மார்ச் 15, 1992)
வழிபாட்டில் ஒரு மலரை இறைவனுக்கு அர்ப்பணிப்பது போல, ஒவ்வொரு செயலையும் இறைவனது பாதகமலங்களில் அர்ப்பணிக்கும் மனப்பாங்கினைக் கடைப்பிடியுங்கள். - பாபா