azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

There is only one thing I seek from all of you. Fill your hearts with love. Offer that love to Me. I don’t ask anything from anyone. It is enough if you develop love and share it with others. It is only when you are happy that you can make others happy. What is happiness? It is union with God. By chanting the Name of God, you will experience happiness. Good and sacred acts like worship, japa, and meditation are useful for sanctifying time. But they are not ends in themselves. They are tinged with worldliness. But what is needed is positive action, dedicated to the Divine. Then you will be free from disease. Only by having pure thoughts can you be hale and hearty. Have no ill will toward anybody. I have no hatred for anyone. Hence no one hates Me; all are love-filled beings for Me! I desire that all of you should be blissful! (Divine Discourse, Feb 25, 1998.)
PURE LOVE WILL NEVER SUBMIT TO THE FORCES OF ENVY OR HATRED,
HOWEVER POWERFUL THEY MAY BE. – BABA
உங்கள் அனைவரிடமிருந்தும் நான் வேண்டுவது ஒன்றே ஒன்று தான். உங்கள் இதயங்களை ப்ரேமையால் நிரப்புங்கள். அந்த ப்ரேமையை எனக்கு அர்ப்பணியுங்கள். நான் யாரிடமிருந்தும் எதுவும் கேட்பதில்லை. நீங்கள் ப்ரேமையை வளர்த்துக் கொண்டு அதைப் பிறருடன் பகிர்ந்து கொண்டாலே போதுமானது. நீங்கள் ஆனந்தமாக இருந்தால் மட்டுமே, நீங்கள் மற்றவர்களை ஆனந்தப்படுத்த முடியும். ஆனந்தம் என்றால் என்ன? இறைவனோடு இரண்டறக்கலப்பதே ஆனந்தம்! இறைநாமஸ்மரணை செய்வதன் மூலம் நீங்கள் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். நற்செயல்களான வழிபாடு, ஜபம், தியானம் போன்றவை காலத்தைப் புனிதமாக்கப் பயன்படுகின்றன. ஆனால் அவையே முடிவானவை அல்ல. அவை உலகியலானவற்றோடு கலந்திருப்பவை. ஆனால், இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நேர்மறையான செயலே இப்போது தேவை. பின்னர் நீங்கள் நோயின்றி இருப்பீர்கள். பரிசுத்தமான எண்ணங்களோடு இருந்தால் தான் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். எவர் மீதும் தீய எண்ணம் கொண்டிருக்காதீர்கள். எனக்கு எவர் மீதும் வெறுப்பு இல்லை. எனவே எவரும் என்னை வெறுப்பதில்லை; எனக்கு அனைவரும் ப்ரேமை நிறைந்த ஜீவன்களே! நீங்கள் அனைவரும் ஆனந்தமயமாக இருக்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்! (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 25, 1998)
அவை எவ்வளவு வலிமையானவையாக இருந்தாலும்,பொறாமை அல்லது த்வேஷத்தின் சக்திகளுக்கு, பரிசுத்தமான ப்ரேமை ஒரு போதும் அடி பணியாது - பாபா