azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 21 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 21 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Liberation is not something to be achieved in after-life. Striving for liberation must start early in life and proceed continuously. Another term for liberation is "emancipation". That is true freedom – freedom from bondage to senses. This means that you must carry on all duties without attachment to the fruits thereof. Today, all actions are performed with attachment to results. For instance, students pursue the study of bioscience with a view to becoming doctors. There is per se nothing wrong with this. But when they become doctors, they should be primarily concerned about the welfare of their patients and not in their earnings! Even in rendering social service, there is often an element of self-interest that vitiates the quality of your service. Instead of being a positive act of selfless love, service becomes a negative act carrying the taint of self-interest. No permanent joy can be derived from such negative activities. (Divine Discourse, Feb 15, 1998.)
SERVICE SPRINGS OUT OF LOVE AND IT SCATTERS LOVE IN PROFUSION. - BABA.
மோக்ஷம் என்பது வாழ்க்கை முடிந்த பின் அடைய வேண்டியது ஒன்றல்ல. மோக்ஷத்திற்கான முனைப்பு வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். மோக்ஷம் என்பதற்கு மற்றொரு சொல், ‘விடுதலை' (emancipation). புலன்களின் பந்தங்களில் இருந்து விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரமாகும். அதாவது நீங்கள் எல்லா கடமைகளையும் பலன் கருதாது பற்றில்லாது செய்யவேண்டும் என்பதே இதன் பொருள். இன்றோ எல்லா செயல்களும் முடிவில் கிடைக்கும் பலன்களுக்காகவே செய்யப்படுகின்றன. உதாரணமாக மாணவர்கள் உயிரியல் பாடத்தை மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக படிக்கின்றார்கள். இதில் தவறு ஏதும் இல்லை தான். ஆனால் அவர்கள் மருத்துவர்கள் ஆன பின், தங்களுடைய நோயாளிகளின் நலன்களைப் பற்றி முதன்மையாக அக்கறை காட்ட வேண்டுமே அன்றி, தங்களுடைய வருமானத்தைப் பற்றி அல்ல! சமூக சேவை செய்யும் போது கூட, பெரும்பாலும் சுயநலம் கலந்திருப்பதால் உங்கள் சேவையின் தரம் கெடுகிறது. சுயநலமற்ற தூய அன்பால் செய்யப்படும் சேவையானது ஒரு நேர்மறையான செயல் என்பதற்கு மாறாக, சுயநலத்தால் அது கறைபடிந்த எதிர்மறை செயலாக ஆகிவிடுகிறது. இத்தகைய எதிர்மறையான செயல்களிலிருந்து, நிரந்தரமான சந்தோஷத்தைப் பெற முடியாது. (தெய்வீக அருளுரை பிப்ரவரி 15, 1998)
ப்ரேமையிலிருந்து வெளித்தோன்றும் சேவை, ப்ரேமையை அபரிதமாகவும் பரவச்செய்கின்றது. - பாபா