azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

When Rama went to the forest with Sita, one day He told her: "Bhujatha! In this world, there are no greater adorable deities than one's mother and father. When one has with him his loving mother, who cares for him continually and fosters his well-being, without adoring her as Divine, how can a man contemplate on a Being that is subtle and beyond his daily experience? The Divine transcends all human understanding. How can this be recognised? People who cannot comprehend the hearts of parents who are close to them, whose love they experience in daily life, how can they comprehend the Absolute, which the Upanishads declare is beyond the reach of speech and the mind? Hence, the injunction - ‘Mother and Father should be Adored as Divine’. It was my foremost duty to carry out the will of My father.” (Divine Discourse, Apr 26, 1993.)
EVERYONE SHOULD CHERISH ONE’S PARENTS AS EMBODIMENTS OF THE DIVINE. - BABA.
ஸ்ரீராமர் சீதையுடன் காட்டிற்குச் சென்றிருந்த போது, ஒருநாள் அவர் சீதையிடம், "பூஜாதா! இவ்வுலகில் ஒருவரது தாய் தந்தையரை விட மிகவும் போற்றப்பட வேண்டிய தெய்வங்கள் வேறு எதுவும் இல்லை. எப்போதும் உடனிருந்து, இடையறாது கவனித்து, நம் நலனைப் பேணும் அன்பான தாயை ஒருவன் தெய்வமாகப் போற்றாமல், சூக்ஷ்மமான அன்றாட அனுபவத்திற்கு அப்பாற்பட்ட தெய்வத்தை மனிதனால் எவ்வாறு தியானிக்க முடியும்? தெய்வீகம் மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டது. இதை எவ்வாறு உணரமுடியும்? தங்களுக்கு நெருக்கமான பெற்றோர்களின் அன்பை தினமும் அனுபவித்து விட்டு, அவர்களுடைய இதயங்களைப் புரிந்துகொள்ள முடியாத மனிதர்களால், உபநிஷதங்கள் பறைசாற்றும் வாக்கிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட பரப்ரம்மத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? எனவே, "தாய் தந்தையரை தெய்வமாகப் போற்றவேண்டும்" என்பது வேதவாக்காகும். என்னுடைய தந்தையின் ஆணையை நிறைவேற்றுவதே எனது தலையாய கடமையாகும்" என்று கூறினார். (தெய்வீக அருளுரை ஏப்ரல் 26, 1993)
ஒவ்வொருவரும் தங்கள் தாய், தந்தையரை தெய்வத்தின் திருவுருவங்களாகப் போற்ற வேண்டும். - பாபா