azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
There is no limit to My Ananda (Divine Bliss). I am always immersed in bliss. This is because My bliss is associated with pure love and not material objects. If you follow this path of love, you will derive ineffable Ananda and experience peace. With an equal mind, accept good fortune and misfortune, happiness and sorrow, loss and gain. These are products of nature like heat and cold, summer and winter. They have their purposes to serve. Similarly, the ups and downs of life have lessons to teach us. In fact, without reverses in life, we’ll not be able to experience Divinity. Without darkness, we cannot value light. Without experiencing difficulties, we will not enjoy benefits. It is the lack of peace of mind which compels us to seek the means to realise enduring peace! Scriptures declared that through renunciation alone, immortality is to be attained. Men should learn to practice renunciation so that they discover the secret of enduring peace and bliss! (Divine Discourse, Apr 06, 1983.)
DEVOTION TO THE DIVINE WILL GIVE YOU BLISS, PROSPERITY AND PEACE. - BABA
என்னுடைய பேரானந்தத்திற்கு அளவே கிடையாது. நான் எப்போதும் ஆனந்தத்திலேயே திளைத்திருக்கிறேன். ஏனெனில், என்னுடைய ஆனந்தம் உலகியலான பொருட்களோடு அல்லாது பரிசுத்தமான ப்ரேமையோடு சம்பந்தப்பட்டு இருப்பதால் தான். நீங்கள் இந்த ப்ரேமையின் பாதையைப் பின்பற்றினால், விவரிக்க முடியாத ஆனந்தத்தை அடைந்து, சாந்தியை அனுபவிப்பீர்கள். அதிர்ஷ்டம்-துரதிருஷ்டம், சுகம்-துக்கம், லாபம்-நஷ்டம் ஆகியவற்றைச் சமச்சீரான மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். இவை இயற்கையின் அம்சங்களான வெப்பம் மற்றும் குளிர், கோடை மற்றும் குளிர்காலம் போன்றவையே. அவற்றிற்கும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் உள்ளன. அதைப் போலவே, நமக்குப் புகட்டுவதற்காக, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் பாடங்களைக் கொண்டிருக்கின்றன. உண்மையில் வாழ்க்கையில் பின்னடைவுகள் இன்றி நம்மால் தெய்வீகத்தை அனுபவிக்க முடியாது. இருள் இல்லையென்றால் நம்மால் ஒளியின் மதிப்பை உணர முடியாது. துன்பங்களை அனுபவிக்காமல், நாம் நன்மைகளை அனுபவிக்க மாட்டோம். மனச்சாந்தி இன்மையே, நம்மை நிரந்தரமான சாந்தியைப் பெறுவதற்கான வழியைத் தேட வைக்கிறது! தியாகத்தின் மூலம் தான் அமரத்துவத்தை அடைய வேண்டும் என மறைநூல்கள் பறைசாற்றுகின்றன. மனிதர்கள் தியாகத்தைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்; அப்போது தான் நிரந்தரமான சாந்தி மற்றும் ஆனந்தத்தின் ரகசியத்தைக் கண்டுபிடிக்க இயலும். (தெய்வீக அருளுரை ஏப்ரல் 06, 1983)
இறைவனிடம் கொள்ளும் பக்தி உங்களுக்கு
ஆனந்தம், வளமை மற்றும் சாந்தியை அளிக்கும். – பாபா