azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 15 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 15 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
The tendency to compare yourself with others is very wrong. No two things or no two men are identical. Even identical twins grow in distinct ways of life. No one of the million leaves on a tree is exactly the same as another. Botanists are aware of this feature. Billions of human beings are on the earth, but where is the ‘press’ which has given each of them a novel imprint? This is the glory of God! Millions of boxes are manufactured by a company; all are identical, and all can be locked and opened by the same set of keys. Man is created by God, each with a distinct nature, quality, potentiality and destiny. How, then, can anyone compare oneself with another and either exult or despair? We say someone is tall and feel dejected because we are short. And at other times, we are proud that we are better than others. When we come to think of it, all this is very silly! (Divine Discourse, Jan 8, 1983.)
DO NOT COMPARE YOURSELF WITH OTHERS. FOLLOW YOUR OWN CONSCIENCE AND ENJOY BLISS. - BABA.
உங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் தவறானது. இரண்டு பொருட்களோ அல்லது இரண்டு நபர்களோ ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரே மாதிரியாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் கூட வாழ்க்கையில் வளரும் விதத்தில் மாறுபடுகிறார்கள். ஒரு மரத்தில் இருக்கும் லட்சக்கணக்கான இலைகள், ஒன்று மற்றொன்றைப் போல அப்படியே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தாவரவியல் வல்லுநர்கள் இந்த அம்சத்தைப் பற்றி அறிவார்கள். கோடானுகோடி மக்கள் பூமியில் இருக்கின்றார்கள்; ஆனால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அளித்து அச்சிட்ட அந்த "அச்சகம்” எங்கே? இதுவே இறைவனின் மாட்சிமை! லட்சக்கணக்கான பெட்டிகள் ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன; அனைத்தும் ஒன்றுபோல் இருக்கின்றன; மேலும் ஒரே சாவிக்கொத்தை வைத்து அனைத்தையும் பூட்டலாம், திறக்கலாம். இறைவன் ஒவ்வொரு மனிதனையும் தனித்தன்மை, குணம், திறன் மற்றும் விதியுடன் படைக்கின்றான். இப்படி இருக்கையில், ஒருவரை ஒருவர் ஒப்பீடு செய்து மகிழ்வதோ வருந்துவதோ எப்படி சரியானதாகும்? எவரோ உயரமாக இருக்கிறார் என்று கூறி, நாம் குட்டையாக இருக்கிறோமே என்று மனத்தளர்ச்சி அடைகிறோம். மற்ற சமயங்களில் பிறரை விட நன்றாக இருக்கிறோம் என்று பெருமிதம் அடைகிறோம். இதை நாம் சிந்தித்துப் பார்த்தால், இவை அனைத்தும் முட்டாள்தனமே! (தெய்வீக அருளுரை ஜனவரி 8, 1983)
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். உங்கள் மனச்சாட்சியைப் பின்பற்றி ஆனந்தத்தை அனுபவியுங்கள். - பாபா