azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Man has to worship God in the form of man; God appears before him as a blind beggar, an idiot, a leper, a child, a decrepit old man, a criminal or a madman. You must see even behind those veils, the divine embodiment of love, power and wisdom, the Sai, and worship Him through selfless service. God cannot be identified with one Name and one Form. He is all Names and Forms. Your Names too are His, you are His Forms! You appear as separate individual bodies because the eye that sees them seeks only bodies, the outer encasement! When you sanctify your vision and look at them through the Atmic eye, the eye that penetrates behind the physical with all its attributes and appurtenances, then, you will see others as waves on the ocean of the Absolute, as "thousand heads, eyes and feet'' of the Supreme Being as it is sung in the Rigveda. Strive to win that Vision and to saturate yourself with that Bliss! (Divine Discourse, Apr 01, 1975.)
MAN CAN REALISE HIS MISSION ON EARTH ONLY WHEN HE KNOWS HIMSELF AS DIVINE AND WHEN HE REVERES ALL OTHERS AS DIVINE. - BABA
மனிதன் இறைவனை மனித ரூபத்தில் வழிபட வேண்டும்; இறைவன், அவன் முன் ஒரு பார்வையற்ற பிச்சைக்காரனாக, முட்டாளாக, தொழுநோயாளியாக, குழந்தையாக, நலிந்த வயோதிகனாக, குற்றவாளியாக அல்லது பைத்தியக்காரனாகத் தோன்றுகிறான். இந்த மாயத்தோற்றங்களுக்குப் பின்னால், ப்ரேமை, சக்தி மற்றும் ஞானத்தின் திருவுருவமாக இருக்கும் சாயியைக் கண்டு, தன்னலமற்ற சேவையின் மூலம் நீங்கள் அவரை வழிபட வேண்டும். இறைவனை ஒரே ஒரு நாமம் அல்லது ரூபத்தோடு மட்டுமே அடையாளம் காண முடியாது. அனைத்து நாமங்களும், ரூபங்களும் அவனுடையதே. உங்களுடைய நாமங்களும் கூட அவனுடையதே, நீங்களும் அவனுடைய ரூபங்களே! நீங்கள் வெவ்வேறான தனிப்பட்ட உடல்களாகத் தோன்றுகிறீர்கள்; ஏனெனில் அவற்றைக் காணும் கண், புறத்தோற்றமாகிய உடல்களை மட்டுமே காண விழைகிறது. நீங்கள் உங்களுடைய கண்ணோட்டத்தைப் புனிதமாக்கிக் கொண்டு, அனைத்து பண்புகள் மற்றும் தோற்றங்களுடன் இருக்கும் பௌதீகமானவற்றைக் கடந்து காணக் கூடிய ஆத்ம-பார்வையைக் கொண்டு அவர்களைப் பார்க்கும்போது, "ஆயிரம் தலைகள், கண்கள் மற்றும் பாதங்களைக் கொண்டவர் " என்று ரிக் வேதம் வர்ணிக்கும் அந்த பரமாத்மாவாகிய கடலின் மீதுள்ள அலைகளாக பிறரைக் காண்பீர்கள். அந்தக் கண்ணோட்டத்தைப் பெற்று, நீங்களே அந்த பேரானந்தத்தில் திளைத்திருக்கப் பாடுபடுங்கள்! (தெய்வீக அருளுரை ஏப்ரல் 01, 1975)
தன்னைத் தானே தெய்வீகமானவன் என அறிந்து கொண்டு,மற்றவர்கள் அனைவரையும் தெய்வீகமானவர்கள் என மதித்துப் பாராட்டும் போது தான், மனிதன் தான் பூமியில் பிறந்த நோக்கத்தை அடைய முடியும். – பாபா