azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Love for the Lord should not degenerate into fanaticism and hatred of other names and forms. Nowadays, this type of cancer is affecting even eminent men. You must avoid it. Believe that all who revere the Lord and walk in fear of sin are your brothers, your nearest kith and kin. Their outer dress or language or skin colour, or even methods they adopt to express their reverence and fear are not important at all. Sugar dolls are valued for the sugar, not the shapes they are given by the manufacturer. Their sweetness makes men purchase them; it doesn't matter whether they are elephants, dogs, cats, rats, jackals or lions. That is a matter of individual fancy. Each is sweet, that is the essential thing. The sweetness draws the manava (man) towards Madhava (God); pravrritti (external deed) towards nivritti (inner path), ananda (happiness) towards Sat-Chit-Ananda (Bliss in the awareness of the Supreme Being). When the appetite for these grows, all low desires and such hunger ceases! (Divine Discourse, Feb 20, 1966.)
NAMES AND FORMS MAY BE DIFFERENT, BUT ALL BEINGS ARE PART AND PARCEL
OF THE SAME DIVINE PRINCIPLE. - BABA.
இறைவன் மீதான ப்ரேமை வெறித்தனமாகவும், பிற நாம ரூபங்களின் மீதான வெறுப்பாகவும் சிதைந்து விடக்கூடாது. இந்நாளில் இவ்விதமான புற்றுநோய் பிரபலமான மனிதர்களையும் கூட பாதிக்கின்றது. நீங்கள் இதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இறைவனைப் போற்றி, பாவத்திற்கு அஞ்சி நடந்து கொள்வோர் அனைவரும் உங்களுடைய சகோதரர்கள், உங்களுடைய மிக நெருங்கிய உற்றார் உறவினர் என்று நம்புங்கள். அவர்களின் உடை, மொழி, நிறம், மற்றும் அவர்கள் தங்களது பயபக்தி மற்றும் பயத்தை வெளிப்படுத்தும் முறைகள் - இவை எதுவும் முக்கியம் இல்லை. சர்க்கரைப் பொம்மைகள் அதில் இருக்கின்ற சர்க்கரைக்காக மதிப்பிடப்படுகின்றனவே அன்றி, அவற்றைத் தயாரித்தவர் அவற்றிற்கு அளித்த உருவங்களுக்காக அல்ல. அதனுடைய இனிப்புத் தன்மையே மனிதர்களை அதை வாங்கச் செய்கிறது; அவை உருவத்தில் யானைகளா, நாய்களா, பூனைகளா, நரிகளா அல்லது சிங்கங்களா என்பது ஒரு பொருட்டல்ல. அது தனிப்பட்டவர்களின் ரசனையைப் பொறுத்தது. ஒவ்வொன்றும் இனிப்பு தான் என்பதே முக்கியம். இத்தகைய (இறைவனின்) இனிமையே மனிதனை கடவுளை நோக்கியும் (மானவ->மாதவ); வெளிப்புற செயல்களை உள்நோக்கியும் (ப்ரவ்ருத்தி->நிவ்ருத்தி); ஆனந்தத்தை சச்சிதானந்தத்தை நோக்கியும் ஈர்க்கிறது. இவற்றிற்கான ஏக்கம் வளர வளர அனைத்து கீழ்த்தர ஆசைகளும் தாபங்களும் நீங்கி விடுகின்றன! (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 20, 1966)
நாம, ரூபங்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் அனைத்து உயிரினங்களும் ஒரே தெய்வீக தத்துவத்தின் அங்கங்களே. - பாபா